கல்யாண வயசுதான்... திருமணம் பற்றிய தனது முடிவை அதிரடியாக மாற்றிய 'தலைவி'... இதுதான் காரணமாம்

By

மும்பை: கல்யாணத்தின் மீது கொண்டிருந்த எதிர்மறை நம்பிக்கை, தற்போது மாறியுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் நடிகை கங்கனா.

இந்தி நடிகை கங்கனா ரனவத், தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.

இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான தலைவியில் நடித்து வருகிறார். இதை விஜய் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது.

3 தேசிய விருதுகள்

3 தேசிய விருதுகள்

இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று தேசிய விருதுகளை பெற்றவர். திருமணம் குறித்து எதிர்மறை கருத்தைக் கொண்டிருந்த அவர், இப்போது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

அஸ்வினி ஐயர்

அஸ்வினி ஐயர்

கங்கனா, இப்போது பங்கா என்ற படத்தில் நடித்துள்ளார். இதை தமிழில், அம்மா கணக்கு படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். இவர் கணவர் நிதேஷ் திவாரியும் இந்தி திரைப்பட இயக்குனர்.

மனப்பூர்வ உதவி

மனப்பூர்வ உதவி

பங்கா படப்பிடிப்பின்போது இருவருடனும் அதிக நேரம் இருந்ததாகவும் அப்போது தனது மனைவிக்கு நரேஷ் மனப்பூர்வமாகச் செய்த உதவிகளை கண்டு வியந்ததாகவும் இதையடுத்து தனக்குத் திருமணத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கங்கனா.

அதிக திறமை

அதிக திறமை

அவர் மேலும் கூறும்போது, எனக்கு வரக்கூடிய கணவர், புத்திசாலியாகவும் அழகாகவும் என்னை விட அதிக திறமை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார் கங்கனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X