ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு ரூ. 24 கோடி சம்பளம்?
Recommended Video

சென்னை: தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு ரூ. 24 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் ஏ.எல். விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக எடுக்கிறார். அந்த படத்தில் நயன்தாரா ஜெயலலிதாவாக நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

சம்பளம்
ஜெயலலிதா எப்படி ஒரு காலத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தாரோ அதே போன்று தான் தற்போது கங்கனா உள்ளார். ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா அதிக சம்பளம் கேட்டும் விஜய் ஒப்புக் கொண்டாராம்.

கங்கனா
தலைவி படத்தில் நடிக்க கங்கனாவுக்கு ரூ. 24 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். இதை கங்கனாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையாக கூறி வருகின்றனர். தலைவி படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக தொகை
தென்னிந்திய படத்தில் ஒரு பாலிவுட் நடிகை இவ்வளவு பெரிய சம்பளம் வாங்குவது இதுவே முதல் முறை ஆகும். ரூ. 24 கோடி என்றாலும் பரவாயில்லை கங்கனா நடித்தால் படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்று நம்பி தயாரிப்பாளர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டார்களாம்.

கெரியர்
பாலிவுட்டில் சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கி வரும் கங்கனாவின் கெரியர் அவ்வளவு தான் என்று விமர்சித்தார்கள். இந்நிலையில் அவருக்கு தலைவி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











