10 வருட கனவை நனவாக்கினார்... பரபர மும்பையில் சொந்தமாக ஸ்டூடியோ தொடங்கினார் 'தலைவி'
சென்னை: நடிகை கங்கனா ரனவத், சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை மும்பையில் திறந்துள்ளார்.
இந்தி நடிகை கங்கனா ரனவத், தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.
இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார். இதை விஜய் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது.

3 தேசிய விருதுகள்
இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று தேசிய விருதுகளை பெற்றவர்.

பங்கா
இப்போது பங்கா என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். இதை தமிழில், தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்த, அம்மா கணக்கு படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மணிகர்ணிகா பிலிம்ஸ்
இவர் தற்போது சொந்தமாக, ஸ்டூடியோ ஒன்றை மும்பையின் பாலி ஹில் பகுதியில் தொடங்கியுள்ளார். மணிகர்ணிகா பிலிம்ஸ் என்ற இந்த நிறுவனத்தின் திறப்பு விழா பூஜையுடன் நேற்று நடந்தது. இதில் கங்கனாவின் சகோதரி ரகோலி சந்தல், அவர் மகன் பிரித்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர், இயக்குனர்
இந்தப் புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ள ரகோலி, கங்கனா தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பணியாற்றுவார் என்றும் நியூயார்க் திரைப்பட அகாடமியில் திரைப்பட தயாரிப்பு பற்றி படித்துள்ள சகோதரர் அக்ஷ்த், சட்டம் மற்றும் நிதித்துறைகளை கவனிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

10 வருட கனவு
சொந்தமாக ஸ்டூடியோ கட்ட வேண்டும் என்று பத்து வருடத்துக்கு முன் முடிவு செய்திருந்தாராம் கங்கனா. அவரது ஆசை இப்போது நிறைவேறியுள்ளது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டூடியோ திறந்துள்ள கங்கனாவுக்கு ஏராளமான நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











