பாத்டப்பில் நிர்வாண போஸ் கொடுத்த கங்கனா ரனாவத்.. வைரலாகும் போட்டோ!
Recommended Video

மும்பை: கங்கனா ரனாவத் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தரமான படங்களாகத் தான் தேர்ந்தெடுத்து நடிப்பார்.
இவர் நடித்த 'குயின்' திரைப்படம் செம வசூல் அள்ளியது. இந்தப் படம் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது.
இந்நிலையில், கங்கனா நடிக்கும் பாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் பாத்டப்பில் நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார் கங்கனா ரனாவத்.

எப்படிப்பட்ட காட்சிகளிலும்
இந்திய திரையுலகில் நடிகைகள் இப்போதெல்லாம் படங்களுக்காக எந்த எல்லைக்கும் சென்று நடிக்கத் தொடங்கிவிட்டனர். படங்களுக்காகத் தங்களை வருத்திக்கொள்வது மட்டுமல்லாமல் தங்கள் இமேஜை துறந்து எப்படிப்பட்ட காட்சிகளிலும் நடிக்கிறார்கள்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத் திறமையான நடிகை எனப் பெயர் பெற்றவர். ஜெயம் ரவி நடித்த 'தாம்தூம்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவரது 'குயின்' திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படம் நான்கு தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகிவருகிறது.
பாலியல் தொல்லை சர்ச்சை
இரண்டு முறை தேசிய விருதை வென்றுள்ளார் கங்கனா. அதிலும் தொடர்ந்து இரண்டு வருடமும் இவர் தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தரும் பாலியல் தொல்லைகளையும் மீடியாவில் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர்.

நிர்வாண போஸ்
நல்ல நடித்து வரும் கங்கனா அடுத்து ராஜ்குமார் ராவுடன் மென்டல் ஹை க்யா (Mental HaiKya) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இவர் நிர்வாண போஸ் கொடுத்து ஷாக் ஆக்கியுள்ளார்.
பாத்டப் புகைப்படம்
சமீபத்தில், நடிகை ஶ்ரீதேவி துபாய் நட்சத்திர விடுதியில் பாத்டப்பில் தவறி விழுந்து உயிரழந்தார். இந்நிலையில், பாத்டப்பில் நிர்வாணமாக அதுவும் கையில் கத்தியுடன் இவர் கொடுத்திருக்கும் இந்த போஸ் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











