Don't Miss!
- News
தூண்டிலில் "பாக்யராஜ்".. மொத்த கட்சியும் திரும்பி பாக்குதே.. பிரம்மாஸ்திரத்தை எடுக்கும் ஓபிஎஸ்.. அடடே
- Finance
வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு.. ஜனவரி 30 -31 வங்கி சேவைகள் பாதிக்காது..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தலைவி படம் ரிலீஸ்: ஜெயலலிதா, எம்ஜிஆர், கருணாநிதி நினைவிடத்தில் கங்கனா ரனாவத் மரியாதை!
சென்னை: தலைவி படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகை கங்கனா ரனாவத் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்த்தூவி மறியாதை செலுத்தி உள்ளார்.
மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக தலைவி உருவாகி உள்ளது.
ஆயுத
பூஜைக்கு
வெளியாகும்
ஆர்யாவின்
அரண்மனை
3!
இந்த படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

ஜெயலலிதா பயோபிக்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி படம் உருவாகி உள்ளது. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை சுற்றி மேலும் சில படங்களும் வெப்சீரிஸ்களும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
பிள்ளையார் சுழி போட்டு மீண்டும் தமிழ் சினிமாவில் புதிய படங்களை தியேட்டர்களில் வெளியிட சினிமா துறையினர் முடிவு செய்துள்ளனர். வரும் வெள்ளி செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கங்கனா ரனாவத் நடித்துள்ள தலைவி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை
தலைவி படத்தின் ரிலீஸை முன்னிட்டு சென்னையில் பிரஸ் மீட் உள்ளிட்ட விளம்பர நிகழ்ச்சிக்கு படக்குழு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிலையில், அது தொடர்பாக சென்னைக்கு வந்துள்ள நடிகை கங்கனா ரனாவத் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்று மலர்த் தூவி மரியாதை செலுத்தி உள்ளார். இயக்குநர் ஏ.எல். விஜய் உள்ளிட்ட படக்குழுவினரும் மரியாதை செலுத்தினர்.

கருணாநிதி, எம்ஜிஆர் நினைவிடங்களிலும்
ஜெயலலிதா பயோபிக் என்பதால் வெறும் ஜெயலலிதாவுக்கு மட்டும் மரியாதை செலுத்தி விட்டு வர முடியுமா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த தமிழக முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களுக்கும் சென்று நடிகை கங்கனா ரனாவத் மரியாதை செலுத்தி உள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சிக்கல் இல்லாமல்
தலைவி படம் தியேட்டரை தொடர்ந்து ஒடிடியிலும் வெளியாக திட்டமிட்டு இருப்பதால், பல மல்டிபிளக்ஸ் ஓனர்கள் அந்த படத்தை மல்டி பிளக்ஸ்களில் திரையிட அனுமதிக்க முடியாது என மறுத்து விட்டனர். இதன் காரணமாக நடிகை கங்கனா ரனாவத்தே நேரடியாக மல்டி பிளக்ஸ் ஓனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். எந்தவொரு சிக்கலும் இல்லாமல் திட்டமிட்டப்படி தலைவி படம் ரிலீஸ் ஆக வேண்டும் என முன்னாள் முதல்வர்கள் அனைவரின் நினைவிடத்திலும் கங்கனா ரனாவத் வேண்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எம்ஜிஆராக
தலைவி படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். அச்சு அசல் எம்ஜிஆரை போலவே அரவிந்த் சாமி இருப்பதை டீசர் மற்றும் புரொமோ வீடியோக்களில் பார்த்த ரசிகர்கள் தலைவி படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

லாபத்துடன் போட்டி
விஜய்சேதுபதியின் லாபம் மற்றும் கங்கனா ரனாவத்தின் பான் இந்தியா திரைப்படமான தலைவி என இரு படங்கள் அடுத்த வாரம் மோதிக் கொள்ள உள்ள நிலையில், எந்த படத்திற்கு லாபம் கிடைக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ரசிகர்கள் வருவார்களா
மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டு கான்ஜூரிங், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட பழைய படங்கள் திரையிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் புதிய படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், மீண்டும் கொரோனா பயமின்றி ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்களா? என்கிற பெரிய கேள்வியும் எழுந்துள்ளது. தலைவி மற்றும் லாபம் படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தால், வலிமை, டாக்டர், மாநாடு மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் வரிசை கட்டி வெளியாகும்!