twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைவிக்கு பெரிய ‘நோ’.. மல்டிபிளக்ஸ்களிடம் மன்றாடும் கங்கனா ரனாவத்.. நிலைமை இப்படி ஆகிடுச்சே!

    |

    சென்னை: தலைவி படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என மல்டி பிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் கறார் காட்டியதால் கங்கனா ரனாவத் மன்றாடும் நிலைக்கு இறங்கி உள்ளார்.

    எந்தவொரு விவகாரம் ஆனாலும், எதிர்த்து துணிச்சலாக பேசி சர்ச்சையில் சிக்கினாலும் பரவாயில்லை என கெத்துக் காட்டி வந்த கங்கனா ரனாவத்தா இப்படி மன்றாடுகிறார் என பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    என்னடா பொன்னியின் செல்வனுக்கு வந்த சோதனை... இப்படியா போய் சிக்குவாங்க ? என்னடா பொன்னியின் செல்வனுக்கு வந்த சோதனை... இப்படியா போய் சிக்குவாங்க ?

    தியேட்டரில் வெளியான கையோடு உடனடியாக ஒடிடிக்கு செல்லக் கூடாது என்பதால் மல்டி பிளக்ஸ்கள் தலைவி படத்தை திரையிட மறுத்துள்ளது.

    தியேட்டர்கள் திட்டவட்டம்

    தியேட்டர்கள் திட்டவட்டம்

    ஒடிடியில் வெளியான படங்களை தியேட்டர்களில் இனி திரையிட மாட்டோம் என்றும், தியேட்டரில் வெளியாகும் படங்கள் குறைந்த பட்சம் 4 வாரங்களுக்கு பிறகு தான் ஒடிடிக்கு செல்ல வேண்டும் என்பதில் தியேட்டர் உரிமையாளர்கள் திட்டவட்டமாக உள்ளனர். இதன் காரணமாகத் தான் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் வெளியாக முடியாத சூழல் உருவாகி உள்ளது.

    டபுள் லாபம்

    டபுள் லாபம்

    தியேட்டரில் ஒரு லாபம் மற்றும் ஒடிடியில் ஒரு லாபம் என இரட்டை லாபத்தை தயாரிப்பாளர்கள் சம்பாதிக்க பார்க்கின்றனர். ஆனால், இத்தனை நாட்கள் மூடிக் கிடந்த தியேட்டர்களின் நிலைமையை கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல் அவர்கள் மட்டுமே சம்பாதிக்க நினைப்பதற்கு நாங்கள் அனுமதி அளிக்க முடியாது. படங்கள் குறைந்தது 4 வாரங்கள் ஓடினால் தான் எங்களுக்கு இனி லாபம் கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    திரைக்கு வரும் லாபம்

    திரைக்கு வரும் லாபம்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தியேட்டர் மற்றும் ஒடிடிக்களில் பல படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. திரையில் தான் விஜய்சேதுபதியின் லாபம் படம் ரிலீஸ் என்பதில் படக்குழு உறுதியாக உள்ள நிலையில், லாபம் படம் திரைக்கு வருகிறது. அது தொடர்பான பிரஸ் மீட் சென்னையில் நேற்று நடைபெற்றது. மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ஒரு தலைவன் என விஜய்சேதுபதி உருக்கமாக பேசி இருந்தார்.

    தலைவிக்கு தலைவலி

    தலைவிக்கு தலைவலி

    வரும் செப்டம்பர் 10ம் தேதி தியேட்டர் மற்றும் ஒடிடியில் வெளியாக கங்கனா ரனாவத்தின் தலைவி படம் திட்டமிட்டு உள்ள நிலையில், தியேட்டர் அதிபர்களின் இந்த திடீர் நெருக்கடி காரணமாக தலைவி திரைப்படம் தியேட்டரில் வெளியாவதில் மிகப்பெரிய சிக்கல் உருவாகி உள்ளது.

    மல்டிபிளக்ஸ் பிடிவாதம்

    மல்டிபிளக்ஸ் பிடிவாதம்

    அதிலும், ஐநாக்ஸ், பிவிஆர் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இந்தியா முழுவதும் தலைவியின் இந்தி வெர்ஷன் உள்பட எதையும் ரிலீஸ் செய்ய முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டது. இதனால், தியேட்டர்களில் வெளியாக காத்திருந்த தலைவி படத்துக்கு பெரிய தலைவலி உண்டாகி உள்ளது.

    கங்கனா கோரிக்கை

    கங்கனா கோரிக்கை

    இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போதெல்லாம் தியேட்டரில் படங்களை ரிலீஸ் செய்யவே எனது படத்தின் தயாரிப்பாளர்கள் போல சிலர் மட்டுமே துணிந்து இறங்குகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தலைவி போன்ற படத்தை தியேட்டரில் வெளியிட முடியாது என சொல்வது நியாயமற்ற செயல், ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தால் தான் அனைவருக்கும் பலன் கிடைக்கும் என மிகவும் சாஃப்ட்டான டோனில் கங்கனா ரனாவத் போஸ்ட் போட்டுள்ளார்.

    மன்றாடும் அளவுக்கு

    மன்றாடும் அளவுக்கு

    இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமாக உருவாகி உள்ள தலைவி படத்தின் வெளியீட்டிற்காக இப்படி மன்றாடும் அளவுக்கு கங்கனா ரனாவத் இறங்கிட்டாங்களே, இதுவரை பாலிவுட் குறித்து அந்த அளவுக்கு குறை சொல்லிவிட்டு தற்போது இப்படி கெஞ்சினால் யார் தான் சப்போர்ட்டுக்கு வருவார்கள் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    சம்மதிப்பார்களா

    சம்மதிப்பார்களா

    கங்கனா ரனாவத்தின் இந்த கோரிக்கையை மல்டி பிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் செவி மடுத்து கேட்பார்களா? தலைவி படத்தை திரையரங்கில் வெளியிட அனுமதி கொடுப்பார்களா? என்பதை எதிர்பார்த்து ஒட்டுமொத்த சினிமா துறையும் காத்திருக்கிறது.

    English summary
    Popular Bollywood actress Kangana Ranaut longrequest to Multiplexes for Thalaivi theatrical release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X