‘கொலை வெறி லிப்லாக்‘... ஹீரோ உதட்டைக் குதறிய ‘ரிவால்வர் ராணி’ கங்கணா ரனாவத்

மும்பை: முத்தக்காட்சியில் நடித்த போது நடிகை கங்கணா ரனாவத் கதாநாயகனின் உதட்டை கடித்து காயப்படுத்தி விட்டாராம். இதனால் காயம் ஆறியதும் அக்காட்சி ஒரு வாரம் கழித்து மீண்டும் சுபமாக படமாக்கப் பட்டதாம்.

தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்தவர் இந்திப்பட நடிகை கங்கணா ரனாவத். இவர் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் சாய் கபீர் இயக்கத்தில் 'ரிவால்வர் ராணி' என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 25-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்தப் படத்தில் கங்கனா ரனாவத், பியூஷ் மிஸ்ரா, வீர் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகனின் உதட்டை கோபத்தில் நிஜமாகவே கடித்து விட்டாராம் கங்கணா.

லிப்லாக் காட்சி...

லிப்லாக் காட்சி...

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் கங்கனா ரனாவத்துக்கும், வீர் தாஸுக்கும் இடையேயான லிப்லாக் காட்சி படமாக்கப் பட்டது.

என் காதல் சொல்ல வார்த்தையில்லை...

என் காதல் சொல்ல வார்த்தையில்லை...

அதாவது கைது செய்யப் பட்டு அழைத்துச் செல்லப் படுவதற்கு முன்னதாக கங்கணா, வீர் தாஸை தனிமையில் சந்தித்து அவரது காதலை உணர்த்துவது போன்ற முத்தக்காட்சியாம் அது.

தைரியம் கொடுத்த கங்கணா...

தைரியம் கொடுத்த கங்கணா...

அம்முத்தக் காட்சியில் நடிக்க கங்கனா ரனாவத் தயாராகி விட, நாயகன் வீர் தாஸ் தான் மிகவும் தயக்கத்துடனே காணப்பட்டாராம். பின்னர் அவருக்கு கங்கனா தைரியம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார்.

கடி முத்தம்...

கடி முத்தம்...

ஆனபோதும், முத்தக்காட்சி இயல்பானதாக வரவில்லை என இயக்குனர் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த கங்கனா, அடுத்த காட்சியில் முத்தம் கொடுத்த போது வீர் தாஸின் உதட்டை கடித்து காயப்படுத்திவிட்டாராம்.

பேக் அப்....

பேக் அப்....

இதனால், வீர் தாஸின் உதட்டில் ரத்தத்தோடு காயம் உண்டாகிவிட்டதாம். அதனைத் தொடர்ந்து அன்றைய தின படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, வீர் தாஸின் காயம் ஆறியதும் ஒருவாரம் கழித்து அதே காட்சியை மீண்டும் படமாக்கியுள்ளனர்.

காமெடி கலந்த ஆக்‌ஷன் படம்...

காமெடி கலந்த ஆக்‌ஷன் படம்...

இதற்கிடையே, ரிவால்வர் ராணி படம் குறித்து அதன் தயாரிப்பாளர் திக்மான்சு தூலியா கூறுகையில், ‘இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்து ஆக்சன் திரைப்படமாக அமைந்துள்ளது என்றும் பி கிரேடு மக்களின் எதிர்பார்ப்பை இது பூர்த்தி செய்யும்' எனத் தெரிவித்துள்ளார்..

திருப்புமுனை படம்....

திருப்புமுனை படம்....

ரிவால்வர் ராணி கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களம் கொண்ட படம் என்பதால், இப்படம் கங்கானா ரனாவத்திற்கு திருப்பு முனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X