கோலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் இதுதான் வித்தியாசம்.. போட்டு உடைத்த கங்கனா
மும்பை: கோலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் இருக்கும் வித்தியாசம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் ஓபனாக பேசியிருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தனக்கு தோன்றியதை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக பேசுபவர். இதனால் அவர் மீது பலர் விமர்சனம் வைப்பதுண்டு. மேலும், அவர் இந்துத்துவா சிந்தனையுடையவர் எனவும் ஒருதரப்பினர் கூறுவது உண்டு.

தமிழில் கங்கனா ரணாவத்
ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தமிழில் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் இருந்து ஒதுங்கிய அவர் ஹிந்தியில் மட்டும் கவனம் செலுத்தினார். இதனையடுத்து அவரை மீண்டும் தலைவி படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தார் ஏ.எல்.விஜய்.

தலைவி கங்கனா ரணாவத்
தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் ஜெயலல்விதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து உருவான படம்தான் தலைவி. இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார் கங்கனா ரணாவத். இள வயது ஜெயலலிதாவாக கங்கனாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதேசமயம் அரசியலுக்குள் நுழைந்த பிறகு இருக்கும் ஜெயலலிதாவாக கங்கனாவின் நடிப்பு பேசப்பட்டாலும் அவரது லுக் ஒத்துவரவில்லை என ரசிகர்கள் கூறினர்.

மீண்டும் தமிழில் களமிறங்கும் கங்கனா ரணாவத்
இந்தச் சூழலில் கங்கனா ரணாவத் மீண்டும் தமிழில் களமிறங்கியிருக்கிறார். பி.வாசு இயக்கத்தில் தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. சந்திரமுகி பாகம் ஒன்றில் ஜோதிகா ஏற்றிருந்த கதாபாத்திரத்தை இதில் கங்கனா ரணாவத் ஏற்றிருக்கிறார். ஆனால் ஜோதிகாவின் நடிப்பை இவரால் ஈடு செய்ய முடியுமா என இப்போதே பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். இருப்பினுஜ்ம், அவரது நடிப்பை தன்னால் ஈடு செய்ய முடியாது என சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தி ஓபனாக தெரிவித்திருந்தார் கங்கனா ரணாவது.

கோலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கு உள்ள வித்தியாசம்
சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் சூழலில் கங்கனா ரணாவத் ட்விட்டரில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், தமிழ் படங்களில் நடித்துவருகிறீர்கள். கோலிவுட்டுக்கும், பாலிவுட்டுக்கும் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பினார்.

கோலிவுட் பாலிவுட் குறித்து ஓபனாக பேசிய கங்கனா
அதற்கு பதிலளித்த கங்கனா, "இது நான் தமிழில் நடிக்கும் மூன்றாவது படம். அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டதற்காகவே இதை நான் விரும்புகிறேன். அவர்கள் என்னிடத்தில், 'நான் மிகவும் அமைதியாக மற்றவர்களிடம் பேசாமல் என்னுடையை வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பதாக கூறுவது எனக்கு உண்மையில் வியப்பாக இருக்கிறது. ஏனெனில் அப்படி இருப்பதை பாலிவுட்டில் திமிர் என்று சொல்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











