ஊசி போட்டு ஏத்துன உடம்பு.. குறைக்க முடியாமல் கஷ்டப்படும் கங்கனா ரனாவத்.. என்ன பண்றாரு பாருங்க!
சென்னை: தலைவி படத்துக்காக அதிகரித்த உடல் எடையை குறைக்க தினமும் கடினமான உடற்பயிற்சியை செய்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத்.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக பல படங்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது போல, நடிகை கங்கனா ரனாவத்தின் தலைவி படத்தின் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த லாக் டவுன் நேரத்தில், அந்த படத்திற்காக ஏற்றிய உடம்பை குறைக்க தினமும் வீட்டிலேயே வொர்க்கவுட் செய்து வருகிறார் கங்கனா.

தாம் தூம்
இயக்குநர் ஜீவா இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். அந்த படத்தை முடிப்பதற்கு முன்பே இயக்குநர் ஜீவா இறந்துவிட்டதால், ஜீவாவின் மனைவி அனிஷா மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இணைந்து அந்த படத்தை இயக்கி, ரிலீஸ் செய்தனர்.

குயின்
பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய கங்கனா ரனாவத்துக்கு கடந்த 2014ம் ஆண்டு வெளியான குயின் திரைப்படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை கங்கனா ரனாவத்துக்கு பரிசளித்தது. பாலிவுட்டில் செம ஹிட்டான அந்த படத்தை பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்துள்ளனர்.

ஜெயலலிதா பயோபிக்
ஜான்சி ராணியாக மணிகர்ணிகா படத்தில் நடித்த கங்கனா ரனாவத், இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத்தின் போர்ஷன்கள் பெரும்பகுதி முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹார்மோன் மாத்திரைகள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஜெயலலிதா, அரசியலுக்கு வந்த பிறகு தனது உடல் நலத்தில் அதிகளவில் அக்கறை செலுத்தாமல் இருந்தார். அதன் காரணமாக அவரது உடல் எடை அதிகரித்தது. ஜெயலலிதாவாக நடித்து வரும் கங்கனா ரனாவத் ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் எடை கூட்டும் ஊசிகளை போட்டுக் கொண்டு 20 கிலோ வரை தனது எடையை கூட்டி நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
View this post on InstagramA post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on
5 கிலோ வரை
தலைவி படத்தைத் தொடர்ந்து தேஜாஸ் படத்தில் போர் விமானம் ஓட்டும் பெண்ணாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார். லாக் டவுன் நேரத்தில் ஜிம்முக்கு போக முடியாத சூழலில் தனது வீட்டிலேயே கடினமான உடற்பயிற்சிகளை செய்து இதுவரை 5 கிலோ எடையை குறைத்துள்ளதாகவும், மேலும், எடையை குறைக்க அதிக நாள் எடுக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











