சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு அமீர்கான் தான் காரணம்.. அடித்துச் சொல்லும் பிரபல நடிகை.. ஏன்?

ஹைதராபாத்: நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு நடிகர் அமீர்கான் தான் காரணம் என 'தலைவி' நடிகை கங்கனா ரனாவத் அதிரடி குற்றம் சாட்டியுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனான ஹே மாய சேஸவே படத்தில் ஹீரோ ஹீரோயினாக சமந்தா மற்றும் நாக சைதன்யா நடித்திருந்தனர்.

பல ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அவ்வளவு காதல்

அவ்வளவு காதல்

சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே அவ்வளவு காதல் பொங்கி வழிந்தது. இந்த ஜோடியா இப்படி ஒரு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது என பலரும் சோகத்தில் மூழ்கும் அளவுக்கு அவர்கள் காதல் கதை இருந்தது. லாக்டவுனில் வந்த சமந்தாவின் பிறந்தநாளுக்கு நாக சைதன்யாவே கேக் செய்து கொடுத்து அசத்திய வீடியோக்கள் எல்லாம் வேற லெவலில் வைரலானது.

எல்லாமே வதந்தின்னு

எல்லாமே வதந்தின்னு

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் குடும்ப நீதிமன்றத்தில் கவுன்சலிங் சென்றதன் பிறகு தான் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகின்றனர் என்கிற செய்திகளே மீடியாவில் வெளியாகத் தொடங்கின. ஆனாலும், சமந்தா ரசிகர்கள் இதெல்லாம் வதந்தின்னு அவங்க ரெண்டு பேருமே சொல்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் இடி போல இப்படியொரு அறிவிப்பு வெளியாகி விட்டது.

200 கோடி வேண்டாம்

200 கோடி வேண்டாம்

நடிகை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக 50 கோடி ரூபாய் முதலில் கிடைக்கும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தொகையே தேவையில்லை என சமந்தா தூக்கி எறியும் அளவுக்கு அவர் மனது இந்த விவாகரத்தில் சங்கடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அமீர்கான் தான் காரணம்

அமீர்கான் தான் காரணம்

இந்நிலையில், இந்த விவாகரத்துக்கு காரணமே சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் (அமீர்கான்) தான் என்கிற பகிரங்க குற்றச்சாட்டை நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நாடு முழுவதும் அதிர்வலையை கிளப்பி இருக்கிறார். சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போன கங்கனா ரனாவத் ஏன் இப்படி சொல்கிறேன் என்பதற்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.

அமீர்கான் படத்தில் நாக சைதன்யா

அமீர்கான் படத்தில் நாக சைதன்யா

விஜய்சேதுபதி நடிக்க விருந்த கதாபாத்திரத்தில் இருந்து அவர் விலகிக் கொண்ட நிலையில், நாக சைதன்யா அந்த கதாபாத்திரத்தில் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் மனைவியை விவாகரத்து செய்த அந்த நடிகரின் ஆலோசனைகளை கேட்டுத் தான் நாக சைதன்யா இப்படியொரு முடிவை எடுத்துள்ளார் என்றும் "Divorce Expert' அமீர்கான் என்றும் கடுமையாக சாடி உள்ளார் கங்கனா ரனாவத்.

பல பெண்கள் நாசம்

பல பெண்கள் நாசம்

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கானால் பல இளம் பெண்கள் நாசமடைந்துள்ளனர் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள கங்கனா ரனாவத்திற்கு எதிராக அமீர்கான் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் அவருடன் சண்டை போட்டு வருகின்றனர்.

ஆண்கள் மேல் தான் தப்பு

ஆண்கள் மேல் தான் தப்பு

உடுத்திய துணியை கழட்டி எறிவது போல ஆண்கள் தான் எப்போதுமே பெண்களை விவாகரத்து செய்து தூக்கி எறிகின்றனர் என்றும் இந்த விவாகரத்து பிரச்சனையில் நடிகை சமந்தாவுக்கு உடன்பாடே இருந்திருக்காது என்கிற கோணத்திலும் கங்கனா ரனாவத் கூறியுள்ளார். எப்போதெல்லாம் விவாகரத்து பிரச்சனைகள் எழுகிறதோ அதில் எல்லாம் ஆண்கள் மீது தான் அதிகளவில் தப்பு இருக்கும் என்றும் ஒட்டுமொத்தமாக சாடி உள்ளார் கங்கனா ரனாவத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X