எல்லாமே வெறும் பில்டப் தானா கோப்ப்பால்: ஹீரோவை வம்பிழுக்கும் நடிகை
மும்பை: என்னை பற்றிய சில உண்மைகளை வெளியிட்டால் அனைவரும் அப்படியே ஷாக் ஆயிடுவாங்க என்று கூறியது வெறும் பேச்சு மட்டும் தானா என நடிகர் ரித்திக் ரோஷன் பற்றி தெரிவித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், நடிகை கங்கனா ரனாவத்தும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்துவிட்டார்கள். அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள். ஒருவரையொருவர் தாக்கி பேட்டிகளும் கொடுத்தார்கள், கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து கங்கனா கூறுகையில்,

ரங்கூன்
நான் ரங்கூன் படப்பிடிப்பில் பிசியாக இருந்துவிட்டேன். இருவருக்கு இடையே இருக்க வேண்டிய விஷயம் ஊர், உலகிற்கு எல்லாம் தெரிந்துவிட்டது. இனியும் இது குறித்து அமைதி காக்க முடியாது.

சினிமா வாழ்க்கை
அவர்(ரித்திக் ரோஷன்) திரையுலகினரிடம் சென்று அழுது புலம்பி என் சினிமா வாழ்க்கையை கெடுக்க நினைத்தார். அவர் போட்ட சீனால் சிலர் எனக்கு போன் செய்து அவர் எங்களை சந்தித்து பேசினார், உங்களிடம் பேச வேண்டும் என்கிறார்கள். நான் எதற்கு பேசணும்.

உண்மை
என்னை பற்றி சில உண்மைகளை வெளியிடப் போவதாகவும், அதை வெளியிட்டால் அனைவரும் அதிர்ச்சி அடைவார்கள் என்றும் கூறினார்கள். நானும் எதை தான் வெளியிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.

வெத்து வேட்டு
பெருசா உண்மையை வெளியிடப் போவதாக கூறிவிட்டு இதுவரைக்கும் எதையும் வெளியிடவில்லை. எல்லாம் வெத்துவேட்டு. ஏமாற்று வேலை என்று குமுறியுள்ளார் கங்கனா ரனாவத்.


Click it and Unblock the Notifications











