ப்ரா - ஜட்டியோடு சரக்கடிக்கும் கங்கனா... பெண்கள் அமைப்பு கண்டனம்!
மும்பை: ப்ரா-ஜட்டியோடு அமர்ந்தபடி தம்மடித்துக் கொண்டும், சரக்கடித்தபடியும் போஸ் கொடுத்துள்ள நடிகை கங்கனாவுக்கு மும்பை பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அவரது இந்தப் படங்கள் ஒரு பத்திரிகையில் வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளன.

தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்தவர் கங்கனா. பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் இவர் சமீபத்தில் கோ இந்தியா என்ற பேஷன் பத்திரிகைக்காக மிகவும் செக்ஸியான போஸ் கொடுத்துள்ளார்.
ப்ரா, ஜட்டி மட்டும் அணிந்து சிகரெட் புகைப்பது போன்றும், மது குடிப்பது போன்றும் கங்கனா காட்சி தந்துள்ளார்.
இது மிகப் பெரிய சமூகக் குற்றம் என மும்பையில் உள்ள பெண்கள் அமைப்பு கங்கனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"பணத்துக்காக கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் நடிகைகள் போஸ் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இது தொடர்ந்தால் நீதிமன்ற நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபடக்கூடிய நிலை ஏற்படும்," என எச்சரித்துள்ளது அந்த அமைப்பு.
பெண்களை மோகப்பொருளாக பயன்படுத்துவதை ஊடகங்களும் நிறுத்த வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











