கங்கனா ரணாவத்தின் புதிய தொழில் தெரியுமா?.. மேடம் செம தெளிவாக இருக்காங்க பாருங்க

மும்பை: கங்கனா ரணாவத் இந்திய அளவில் புகழ் அடைந்தவர். பல படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கக்கூடியவர் அவர். மக்களவைத் தேர்தலில் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சூழல் இப்படி இருக்க கங்கனா புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து அவரே அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார்.

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுவது அவரது இயல்பு. இதனால் அவர் ஆதரவையும், எதிர்ப்பையும் சமமாகவே சம்பாதித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு திரையுலகில் கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார் கங்கனா ரணாவத்.

kangana ranaut bollywood

தமிழில் என்ட்ரி: சூழல் இப்படி இருக்க அவர் தமிழிலும் என்ட்ரி கொடுத்தார். ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார் கங்கனா. அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்திவந்த அவர் தலைவி படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அந்தப் படமும் காலை வாரியது. அதன் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். ஆனால் அதுவும் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

ஓபனாக பேசும் கங்கனா: கங்கனா ரணாவத் தனது மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். மேலும் பாஜகவின் தீவிர ஆதரவாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அவர் ஓபனாக பேசுவது அவருக்கு எதிராகவே பல சமயங்கள் திரும்பியிருக்கின்றன. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது என பல முறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இதனால் அவர் பலத்த கண்டனங்களையும் சந்தித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக எமர்ஜென்சி திரைப்படம் வெளியாகி தோல்வியடைந்தது.

எம்.பி கங்கனா: இதற்கிடையே அவருக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிட்டார் அவர். தீவிரமாக பரப்புரை மேற்கொண்ட அவர் அப்போதும் சர்ச்சைக்குரிய வகையிலேயே பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. இருந்தாலும் அவர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

புதிய தொழில்: சூழல் இப்படி இருக்க கங்கனா ரணாவத் புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதாவது The Mountain Story என்கிற பெயரில் இமாச்சல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதில் இமாச்சல உணவுகள் கிடைக்கும் என்றும் விரைவில் அந்த ஹோட்டல் தொடங்கப்படும் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவரது புதிய தொழிலுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X