நேரடியாக ஃபோன் செய்து அழைத்த அம்பானி மகன்.. போகாத கங்கனா.. காரணம் என்ன தெரியுமா?

சென்னை: இந்தியாவின் தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறியிருந்தது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த் அம்பானியின் திருமணம். ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்துவந்த அவர்; வீட்டு சம்மதத்துடன் அவரை திருமணம் செய்திருக்கிறார். கடந்த மாதம் நடந்த இந்தத் திருமண விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்தச் சூழலில் திருமணத்தில் கலந்துகொள்ளாதது குறித்து கங்கனா ரணாவத் தெரிவித்திருக்கிறார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு திருமணம் முடிந்திருக்கும் சூழலில்; இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்துவந்தார். ராதிகாவும் மும்பையை சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண். அவர் மருத்துவ துறையில் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரது காதலுக்கும் இரண்டு பேரின் வீட்டாரும் உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். அதனையடுத்து ஆனந்த் - ராதிகாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

Anand Ambani Kangana Ranaut

கோலாகல கொண்டாட்டம்: திருமணம் முடிவானதும் இந்தியாவிலும், பிரான்ஸிலிருந்து இத்தாலிவரை செல்லும் ஒரு சொகுசு கப்பலிலும் ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. ப்ரீ வெட்டிங்கிற்கே சொகுசு கப்பலா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தியாவில் நடந்த ப்ரீ வெட்டிங் நிகழ்வும் கோலாகலமாகவே கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்துகொண்டார்.

மூன்று நாட்கள் திருமணம்: அதனையடுத்து ஆனந்த் அம்பானியின் திருமணம் மூன்று நாட்கள் நடத்தப்பட திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த மாதத்தில் மங்கல் உத்சவ் நிகழ்வு நடைபெற்றது. இதில் உலக விஐபிக்கள் முதல் உள்ளூர் விஐபிக்கள்வரை கலந்துகொண்டார்கள். தமிழ் சினிமாவிலிருந்து ரஜினிகாந்த், விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்டோர் குடும்ப சகிதமாக கலந்துகொண்டார்கள்.

வாட்ச் கிஃப்ட்: மேலும் பாலிவுட் திரையுலகமும் திரண்டு சென்று கலந்துகொண்டது. இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய கை கடிகாரத்தை முகேஷ் அம்பானி பரிசாக வழங்கினார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போயினர். மேஉல்ம் ரச்ஜினிகாந்த்தோ நடனம் எல்லாம் ஆடி அமர்க்களப்படுத்தினார்.

கங்கனா சொன்ன காரணம்: இதற்கிடையே ஆனந்த் அம்பானி திருமணத்தில் கங்கனா ரணாவத் கலந்துகொள்ளவில்லை. அதுகுறித்து அவர் கூறுகையில், "ஆனந்த் அம்பானியே ஃபோன் செய்து தனது திருமணத்துக்கு வர வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் ரொம்ப நல்ல பையன். ஆனால் அதே நாளில் எங்களது வீட்டிலும் ஒரு திருமணம் நடந்தது. அதாவது எனது தம்பிக்கும் அதே நாளில் திருமணம் என்று கூறினேன். அதேசமயம் பிரபலங்களின் திருமணத்தில் கலந்துகொள்வதில்லை என்று நான் ஏற்கனவே ஒரு முடிவு செய்திருக்கிறேன்.எது எப்படியோ ஆனந்த் அம்பானி, ராதிகாவுக்கு எனது வாழ்த்துகள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X