யோகா செய்யுங்கள்.. இவ்வளவு வெறுப்பு வேண்டாம்.. அறை வாங்கியது குறித்து கங்கனா ஓபன் டாக்

மும்பை: கங்கனா ரணாவத் இந்திய அளவில் புகழ் அடைந்தவர். பல படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கக்கூடியவர் அவர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சூழல் இப்படி இருக்க சண்டிகர் விமான நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் கங்கனா ரணாவத்தை அறைந்தார்.

பாலிவுட் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுவது அவரது இயல்பு. இதனால் அவர் ஆதரவையும், எதிர்ப்பையும் சமமாகவே சம்பாதித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு திரையுலகில் கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார் கங்கனா ரணாவத்.

Kangana Ranut Bollywood

தமிழில் என்ட்ரி: சூழல் இப்படி இருக்க அவர் தமிழிலும் என்ட்ரி கொடுத்தார். ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார் கங்கனா. அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்திவந்த அவர் தலைவி படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அந்தப் படமும் காலை வாரியது. அதன் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். ஆனால் அதுவும் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

ஓபன் கங்கனா: கங்கனா ரணாவத் தனது மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். மேலும் பாஜகவின் தீவிர ஆதரவாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அவர் ஓபனாக பேசுவது அவருக்கு எதிராகவே பல சமயங்கள் திரும்பியிருக்கின்றன. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது என பல முறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இதனால் அவர் பலத்த கண்டனங்களையும் சந்தித்திருக்கிறார்.

தேர்தலில் வெற்றி: கங்கனா தொடர்ந்து ஆதரவு அளித்து வந்ததை அடுத்து அவர் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிட்டார் அவர். தீவிரமாக பரப்புரை மேற்கொண்ட அவர் அப்போதும் சர்ச்சைக்குரிய வகையிலேயே பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. இருந்தாலும் அவர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இப்போது எம்.பியாகிவிட்டதால் அவர் மீண்டும் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது.

கங்கனா பதிவு: சூழல் இப்படி இருக்க நேற்று முன் தினம் அதிகாலை சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தபோது அவரை பெண் காவலர் ஒருவர் ஓங்கி அறைந்தார். விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதற்காக இவ்வாறு அறைந்தேன் என அந்த அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலியல் குற்றவாளி, கொலைகாரன், திருடன் என அனைவருமே ஒரு குற்றத்தை செய்ய உடல், உணர்ச்சி, உளவியல் ரீதியான வலுவான ஏதோ ஒரு காரணம் இருக்கும். எந்த குற்றமும் காரணம் இல்லாமல் நடக்காது. ஆனாலும் அவர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

யோகா செய்யுங்கள்: ஒருவரின் அந்தரங்க பகுதிக்குள் நுழைந்து அவர்களின் அனுமதியின்றி அவர்களை தொட்டு தாக்குவது சரியாக இருந்தால் நீங்கள் கற்பழிப்பு அல்லது கொலை செய்தாலும் பரவாயில்லை என்று சொல்வீர்களா?.. உங்கள் உளவியல் குற்றங்களுக்கு தயவு செய்து யோகா, தியானத்தை செய்யுங்கள். இவ்வளவு வெறுப்பு, பொறாமையை சுமக்காதீர்கள்” என்றார். இதற்கிடையே கங்கனாவை அறைந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X