இது தான் உங்க வீரமா?: நடிகையை விளாசும் நெட்டிசன்கள்
Recommended Video

மும்பை: நடிகை கங்கனா ரனாவத் மணிகர்னிகா படத்தில் வரும் போர் காட்சியில் பொய்க் குதிரை ஓட்டியபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
கங்கனா ரனாவத் ஜான்சி ராணியாக நடித்த மணிகர்னிகா படம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் கங்கனாவை தவிர வேறு யாராலும் ஜான்சி ராணியாக தத்ரூபமாக நடித்திருக்க முடியாது என்றார்கள்.

அதிலும் குறிப்பாக போர்க்காட்சிகளில் கங்கனா ஆக்ரோஷமாக நடித்ததை பார்த்து அனைவரும் வியந்துவிட்டனர். இந்நிலையில் போர்க்காட்சி ஒன்றில் கங்கனா பொய்க்குதிரை ஓட்டியது தெரிய வந்துள்ளது.
கங்கனா எலக்ட்ரிக் குதிரை ஓட்ட பிற நடிகர்கள் நிஜ குதிரை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. அதை பார்த்த நெட்டிசன்கள் கங்கனாவை போலி என்று கிண்டல் செய்யத் துவங்கிவிட்டனர்.
போர்க்காட்சியில் கூட குடையுடன் இருக்கிறீர்களே கங்கனா, வாவ் என்று அவரை விளாசியுள்ளனர்.
Netizens troll Kangana Ranaut for riding electric horse in Manikarnika.


Click it and Unblock the Notifications











