ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை... 'தலைவி' படம் எப்போது ரிலீஸ் ஆகிறது? அறிவித்தார் தயாரிப்பாளர்
Recommended Video
சென்னை: நடிகை கங்கனா ரணவத் நடித்துவரும் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை 'தலைவி' என்ற பெயரில் உருவாகி வருகிறது.
பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத் ஜெயலலிதா கேரக்டரில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை விஜய் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.

பிரகாஷ்ராஜ்
நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். இவரது எம்.ஜி.ஆர் லுக் போஸ்டர்கள் கடந்த மாதம் எம்.ஜி.ஆர் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. நடிகர் பிரகாஷ்ராஜ் கருணாநிதியாக நடிக்கிறார் என்றும் பிரியாமணி, சசிகலாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

பெண்களின் கனவுகளுக்கு
இந்நிலையில் நடிகை கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. விருது அறிவிக்கப்பட்டதும் நடிகை கங்கனா, தான் கவுரவிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை அங்கீகரித்த தாய் நாட்டிற்கு நன்றி என்றும் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு மகளுக்கும், ஒவ்வொரு தாய்க்கும் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண்களின் கனவுகளுக்கும் விருதை சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

மூன்று தேசிய விருது
சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று தேசிய விருதுகளை பெற்றவர் கங்கனா. இப்போது பத்மசஶ்ரீ விருதும் கிடைத்ததை அடுத்து, தலைவி பட டீம் பிரமாண்ட கேக் வெட்டி அதைக் கொண்டாடியது. இதில் இயக்குனர் விஜய் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
ரிலீஸ் எப்போது?
இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்களின் ஒருவரான பிருந்தா பிரசாத் தெரிவித்துள்ளார். அதன்படி வரும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதோடு, கங்கனா நடனம் ஆடுவது போன்ற ஸ்டில் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











