தர்ஷா குப்தாவை எல்லாம் ஓரம் போகச் சொல்லுங்க.. இப்படி ஒரு பிராண்ட் புரோமோஷனா.. கங்கனா சர்மா அதிரடி
சென்னை: சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள் பலர் இருந்தாலும், ஒரு பிராண்டை ரசிகர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதத்தில் வித்தியாசமான புரோமோஷன் செய்வது எல்லோராலும் முடியாது. அந்த வகையில், தற்போது பாலிவுட் நடிகை கங்கனா சர்மா வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கங்கனா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், தனது முதுகுப் பகுதியில் மட்டும் ஒரு பர்ஃப்யூம் பாட்டிலை வைத்து போஸ் கொடுத்துள்ளார். அந்த பாட்டிலின் பெயரான "Crave Me" என்பதையே கேப்ஷனாகவும் பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் இது முழுக்க முழுக்க ஒரு பிராண்ட் புரோமோஷன் என்பது தெளிவாகியுள்ளது.
பொதுவாக பிராண்ட் புரோமோஷன் என்றாலே, தயாரிப்பை கையில் வைத்தோ அல்லது பயன்படுத்துவதுபோலவோ பிரபலங்கள் புகைப்படம் வெளியிடுவது வழக்கம். ஆனால், கங்கனா சர்மா தேர்வு செய்திருக்கும் இந்த கான்செப்ட் இதுவரை இந்திய அளவில் பெரிதாக யாரும் முயற்சிக்காத ஒன்றாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சமீப காலமாக பிராண்ட் புரோமோஷன், கிளாமர் புகைப்படங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர்களில் நடிகை தர்ஷா குப்தாவும் ஒருவர். இன்ஸ்டாகிராமில் தனக்கென ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் அவர், சமீபத்தில் தனியாக ஒரு செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தர்ஷா குப்தா: அந்த செயலியில் வீடியோ கால் வசதிக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம், பிரத்யேக வீடியோக்களுக்கு தனி சந்தா, அதேபோல் பிராண்ட் கொலாபரேஷன்களுக்கும் தனி கட்டணம் என பல்வேறு வகையான சர்வீஸ்களுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலித்து வருகிறார். அதனால், அவர் ஒரு பிராண்டை விளம்பரப்படுத்தினால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
புது கான்செப்ட்: ஆனால், கங்கனா சர்மா வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட், பிராண்ட் புரோமோஷனுக்கும் ஒரு புதிய முகத்தை கொடுத்துள்ளது என்று சொல்லலாம். தயாரிப்பை மட்டும் மையப்படுத்தாமல், புகைப்படத்தின் முழு கான்செப்ட்டையும் அந்த பிராண்டுடன் இணைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

ரசிகர்கள் ரியாக்ஷன்: இதன் காரணமாக, "பிராண்ட் புரோமோஷன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்", "இந்த அளவுக்கு கான்செப்ட் யோசித்து விளம்பரம் செய்வது வேறு லெவல்" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளங்களில் தற்போது "பிராண்ட் புரோமோஷனில் கங்கனா சர்மாவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை" என்ற பேச்சையே இந்த ஒரு பதிவு உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications