அவங்கள மாதிரி ஹாலிவுட் போக நான் என்ன லூசா?: நடிகை பொளேர்
மும்பை: தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா போன்று ஹாலிவுட் செல்ல தான் ஒன்றும் முட்டாள் இல்லை என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். பிரியங்கா ஹாலிவுட் டிவி தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹாலிவுட் செல்வது பற்றி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறுகையில்,

முட்டாள்
மேற்கத்திய நாடுகளில் சினிமா தொழில் நொடிந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஹாலிவுட் செல்ல நான் ஒன்றும் முட்டாள் அல்ல. ஆசியாவில் தான் சினிமா துறையின் நிலை நன்றாக உள்ளது.

பாலிவுட்
15 ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் இருந்தது போன்று தற்போது ஆசியாவில் சினிமாவுக்கு நல்ல நிலைமை உள்ளது. பாலிவுட்டுக்கு இது நல்ல நேரம் ஆகும். அதனால் ஹாலிவுட்டை பார்த்து ஏமாற மாட்டேன்.

உண்மை
என் சக நடிககைகள் எல்லாம் உண்மையை பேச அஞ்சுகிறார்கள். பின்விளைவுகளை நினைத்து அவர்கள் உண்மை பேசுவது இல்லை. ஒரு தேவை என்றால் கூட ஆதரவாக வந்து நிற்க மாட்டார்கள்.

பிரபலம்
பிரபலமாக உள்ள நடிகைகள் கூட உண்மையை பேசினால் தன்னை அனைவரும் வெறுப்பார்கள் என அஞ்சுகிறார்கள். தன்னை அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்காக கூட உண்மையை பேசுவது இல்லை என்று கங்கனா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











