அனுஷ்காவை பார்த்துமா இந்த நடிகை திருந்தல?

By Siva

சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக கங்கனா ரனாவத் துணிந்து ரிஸ்க் எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல். விஜய் படமாக எடுக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

தலைவி படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளார் என்பதும் தெரியும். ஆனால் இந்த படத்திற்காக கங்கனா முதல் முறையாக ஒரு வேலை செய்ய உள்ளார்.

கங்கனா

கங்கனா

தலைவி படத்திற்காக கங்கனா தனது உடல் எடையை ஏற்றப் போகிறாராம். ஜெயலலிதா பூசினாற் போன்று இருந்தார். கங்கனாவோ ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக உள்ளார். அதனால் ஜெயலலிதாவாக மாற முதலில் தனது உடல் எடையை கூட்டப் போகிறாராம். மேலும் இந்த படத்திற்காக அவர் தமிழ் கற்கிறாராம்.

ரூ. 24 கோடி

ரூ. 24 கோடி

தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரனாவத்துக்கு ரூ. 24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. கங்கனா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்றால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். மேலும் அவர் இந்தியா முழுவதும் பிரபலம். அதனால் தான் அவர் பெரிய தொகையை சம்பளமாக கேட்டும் சந்தோஷமாக தருகிறோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

பரதநாட்டியம்

பரதநாட்டியம்

தலைவி படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் துவங்க உள்ளது. கங்கனாவுக்கு ஸ்பெஷல் மேக்கப் போட அமெரிக்காவில் இருந்து மேக்கப் கலைஞர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். கங்கனா தமிழ் கற்பதுடன் பரதநாட்டியமும் கற்று வருகிறார். படத்திற்காக வெயிட் போடும் வேலையை கங்கனா ஏற்கனவே துவங்கிவிட்டாராம்.

அனுஷ்கா

அனுஷ்கா

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா தனது உடல் எடையை ஏற்றிவிட்டு குறைக்க முடியாமல் அல்லாடியது அனைவருக்கும் தெரியும். அவரை பார்த்த பிறகு படத்திற்காக வெயிட் போடும் கதாபாத்திரமே வேண்டாம் என்ற முடிவுக்கு அனைத்து நடிகைகளும் வந்துவிட்டனர். இந்நிலையில் கங்கனாவோ வெயிட் போட்டுக் கொண்டிருக்கிறார். உடல் எடையை ஏற்றி பின்னர் குறைப்பது எல்லாம் பாலிவுட்டில் சர்வ சாதாரணம். அதனால் வெயிட்டை குறைப்பது கங்கனாவுக்கு பிரச்சனையாக இருக்காது. பாலிவுட் பிரபலங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் ஆஸ்திரியாவுக்கு தான் செல்வார்கள். அனுஷ்கா கூட அங்கு சென்று தான் ஸ்லிம்மாகிவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X