Just In
- 49 min ago
அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!
- 1 hr ago
கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing
- 1 hr ago
லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
வேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.!
- Sports
ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்?
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- Finance
4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கங்காரு ஹீரோயினுக்கு வந்த விபரீத ஆசை!
நடிகைகள் என்ற கிரீடம் சுமந்திருந்தாலும், என்னதான் வெளியே பந்தா பண்ணாலும் அவர்களுக்குள்ளும் சின்னச் சின்ன ஆசைகள் எட்டிப் பார்க்கத்தானே செய்கின்றன.
கங்காரு படத்தில் நடிக்கும் ப்ரியங்காவுக்கும் அப்படி ஒரு ஆசை.

கொடைக்கானலில் ஷூட்டிங். ஆபத்தான ஒரு மேட்டுப் பகுதியில் காட்சிகளை வைத்திருந்தார் இயக்குநர் சாமி. அங்கிருந்து பார்த்தால் தட தட பாதாளம்.
அந்த அதலபாதாளத்தை 60 அடி கிரேனில் அமர்ந்து பார்க்க வேண்டும் என்று ப்ரியங்காவுக்கு ஆசை.

தன் ஆசையை அவர் இயக்குநர் சாமியிடம் சொல்ல, அவரும் சம்மதித்து, ஒளிப்பதிவாளர் - இயக்குநர் அமரும் 60 அடி உயர கிரேனில் ப்ரியங்காவை அமர வைத்தார்.
அத்தனை உயரத்தில் அமர்ந்து, பள்ளத்தாக்கைப் பார்த்தால் ஆண்களுக்கே பயத்தில் கால்கள் குறுகுறுக்கும். ஆனால் ப்ரியங்காவோ ஜாலியாக ரசித்து மகிழ்ந்தார்.
வி ஹவுஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் இந்த கங்காரு. மணிவண்ணன் இயக்கிய அமைதிப் படை 2 படத்தைத் தயாரித்தவர் இவர்தான். பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் நாயகனாக அர்ஜூனா நடிக்கிறார். நாயகிகளாக இப்போது கிரேனில் உட்கார்ந்து தைரியம் காட்டி நடிகை பிரியங்காவும் மற்றும் வர்ஷா அஷ்வதியும் நடிக்கிறார்கள். அண்ணன், தங்கை பாசம்தான் படத்தின் மையக்கரு.
படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விரைவில் திரைக்கு வரவிருக்கிறது கங்காரு!