இயக்குநரானார் நடிகை கங்கனா ரணவத்!
நடிகை கங்கனா ரணவத் இயக்குநராக புது அவதாரம் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவருடன் இணைந்து முதலில் ஒரு குறும் படமும், பின்னர் முழுநீளப் படமும் இயக்கப் போகிறாராம்.
பல இந்திப் படங்களிலும், தாம்தூம் என்ற தமிழ்ப் படத்திலும் நடித்தவர் கங்கனா ரணவத்.
சமீபத்தில் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் போயிருந்தபோது, அங்கு நடந்த ஒரு இயக்குநர் பயிற்சி முகாமில் பங்கேற்றாராம்.
இப்போது தனது குறும்படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்துவிட்ட கங்கனா, அதன் எடிட்டிங் பணிகளில் பிஸியாக உள்ளார்.
அப்ப நடிப்பு அவ்வளவுதானா?
"அய்யய்யோ... என்ன இப்படிக் கேட்டுட்டீங்க... நடிப்புதான் எனக்கு முக்கியம். டைரக்ஷன் ஒரு எக்ஸ்பரிமென்ட்தான். இப்போதைக்கு 6 படங்களில் நான் பிஸி. எல்லாமே பெரிய படங்கள். நடிப்புதான் முக்கியம்..." என்றார்.
அதானே..!


Click it and Unblock the Notifications












