கடலில் காட்டுத்தனமாக போஸ் கொடுத்த கங்குவா ஹீரோயின்.. சம்மருக்கு செம ட்ரீட் என குவியும் கமெண்ட்ஸ்!

சென்னை: சூர்யாவின் கங்குவா பட நாயகி திஷா பதானி கடல் கன்னியாகவே மாறிய புகைப்படங்களை தற்போது வெளியிட்டு சம்மர் ட்ரீட் கொடுத்து வருகிறார். பாலிவுட் நடிகையான திஷா பதானி டோலிவுட் மற்றும் கோலிவுட் என தென்னிந்தியாவிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வரும் நிலையில், திஷா பதானி, கியாரா அத்வானி, ஜான்வி கபூர் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்.

Kanguva and Kalki actress Disha Patani enjoys her beach vacation

தோனி பயோபிக் படத்தில் நடித்து பிரபலமான திஷா பதானிக்கு இந்த ஆண்டு அடுத்தடுத்து 2 பெரிய படங்கள் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன.

கங்குவா ஹீரோயின்: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் ஹீரோயினாக திஷா பதானி நடித்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்கு கங்குவா திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது.

கல்கி படத்திலும்: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள கல்கி ஏடி2898 படத்திலும் திஷா பதானி பிரபாஸுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். வரும் ஜூன் 28ம் தேதி பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் அந்த படம் வெளியாக காத்திருக்கிறது.

Kanguva and Kalki actress Disha Patani enjoys her beach vacation

கடலில் திஷா பதானி: கல்கி மற்றும் கங்குவா என இரண்டு பெரிய படங்கள் இந்த ஆண்டு திஷா பதானி நடிப்பில் வெளியாக உள்ள நிலையில், தற்போது விடுமுறையை கொண்டாட வெளிநாட்டுக்கு சுற்றுலா செய்து வரும் திஷா பதானி கடலில் நீச்சல் உடையுடன் குளித்து விளையாடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தோழிகளுடன் கும்மாளம்: சம்மர் ஹாலிடேவை தனது தோழிகளுடன் தீவு ஒன்றுக்கு சென்று கும்மாளம் போட்டு கொண்டாடி வரும் புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் திஷா பதானி வெளியிட்டுள்ளார். பாய் ஃபிரெண்ட் அலெக்சாண்டர் வரவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் திஷா பதானியின் முழு உருவத்தையே தனது கையில் அவர் டாட்டூவாக போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X