ஃபயர் பத்திக்கிச்சு.. கனி குஸ்ருதியும் திவ்ய பிரபாவும் கட்டிப்புடிச்சு.. ரொம்ப ஓவரா இருக்கே!

சென்னை: மலையாள திரையுலகின் தேர்ந்த நடிகையான கனி குஸ்ருதி திவ்ய பிரபாவுடன் இணைந்து கடந்த ஆண்டு நடித்த 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தில் நடித்து உலகையே வியக்க வைத்திருந்தார். கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட இந்த படம் கிராண்ட் ஃப்ரி விருதை வென்று அசத்தியது. இந்தியா சார்பில் கோல்டன் குளோப் விருதுக்கும் நாமினேட் செய்யப்பட்டது.

பாயல் கபாடியா இயக்கத்தில் வெளியான இந்த படத்தை கொண்டாடாத சினிமா பிரபலங்களே இல்லை என சொல்லலாம். அந்தளவுக்கு அனைவரது மனங்களையும் இந்த படம் உலுக்கியது.

Kani Kusruti Divya Prabha heroine

ஆல் வி இமேஜின் அஸ் லைட் படத்தில் நடித்த கனி குஸ்ருதி மற்றும் திவ்ய பிரபா இருவரும் தற்போது இங்கிலாந்தின் பிரபல மேகஸினுக்காக ஒன்றாக இணைந்து கட்டிப்பிடித்தபடி நெருக்கமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

Kani Kusruti Divya Prabha heroine

யாரு இந்த கனி குஸ்ருதி: மலையாள நடிகையான கனி குஸ்ருதி தமிழில் பிசாசு, பர்மா, சிவபுராணம், ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான தலைமைச் செயலகம் வெப்சீரிஸிலும் நக்சலைட் போன்ற போராளி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் நடிப்பில் வெளியான All We Imagine As Light திரைப்படம் உலகளவில் கொண்டாடப்பட்ட நிலையில், இவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களும் அதிகரித்து வருகின்றனர்.

Kani Kusruti Divya Prabha heroine

திவ்ய பிரபாவுடன் நெருக்கமான போட்டோஷூட்: நடிகை திவ்ய பிரபா மற்றும் கனி குஸ்ருதி இருவரும் கிட்டத்தட்ட லெஸ்பியன் போல நெருக்கமாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மலையாள நடிகையான திவ்ய பிரபாவும் கனி குஸ்ருதியும் கவர்ச்சியாக உடையணிந்து கொடுத்துள்ள போஸ் இணையத்தை சூடாக்கியுள்ளது.

Kani Kusruti Divya Prabha heroine

இங்கிலாந்து இதழ்: இங்கிலாந்து நாட்டின் பிரபல மேகஸினான ID மேகஸினுக்காக நடத்தப்பட்ட இந்த ஷூட் ரொம்பவே மகிழ்ச்சியை கொடுத்ததாக கனி குஸ்ருதி மற்றும் திவ்ய பிரபா தெரிவித்துள்ளனர். பிரபல புகைப்படக்கலைஞர் இந்திரா ஜோஷி மும்பையில் இந்த போட்டோஷூட்டை நடத்தினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு விருது விழா நிகழ்ச்சியில் இவர்கள் நடித்த படத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், இப்படியொரு போல்டான போட்டோஷூட்டையும் இவர்கள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கேர்ள்ஸ் வில் பி கேள்ஸ் எனும் ஆங்கில படத்திலும் கனி குஸ்ருதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் நடிப்பில் ஓசபின்டே ஒசியாத் எனும் படம் உருவாகி வருகிறது.

Kani Kusruti Divya Prabha heroine

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X