சரத் படத்தில் கனிகா
சரத்குமார், மம்முட்டி, பத்மப்பிரியா ஆகியோர் நடிக்கும் மலையாளம் பிளஸ் தமிழில் தயாராகும் பழசிராஜா படத்தில் ராணி வேடத்தில் கனிகா நடிக்கவுள்ளார்.
மம்முட்டி ஹீரோவாக நடிக்க, அவரது படைத் தளபதியாக சரத்குமார் நடிக்க உருவாகும் படம் பழசிராஜா. கேரளத்தை ஆண்ட பழங்கால மன்னன் பழசிராஜாவின் கதை இது.தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படம் தயாராகிறது. பத்மப்பிரியாவும் இப்படத்தில் இருக்கிறார். ஆனால் இவருக்கு ஹீரோயின் வேடம் கிடையாது. மாறாக முக்கிய வேடம் ஒன்றில் திறமை காட்டுகிறார் பத்மா.
ஹீரோ மம்முட்டிக்கு யாரை ஜோடியாகப் போடுவது என்று தீவிரமாக யோசித்துள்ளனர். முதலில் ஹாலிவுட் நடிகை யாரையாவது போடலாமா என்று ஆலோசித்துள்ளனர். பின்னர் அது சரிப்பட்டு வராது என்பதை அறிந்து அந்த யோசனையை கைவிட்டனர்.
இப்போது மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார் கனிகா. மதுரை தந்த மல்லிகையான கனிகா, சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் பம்மிக் கிடக்கிறார். இந்த நிலையில்தான் கனிகாவைத் தேடி பழசி ராஜா பட வாய்ப்பு கிடைத்தது.
ராணி வேடம் என்பதாலும், மம்முட்டிக்கு ஜோடி என்பதாலும் உடனே ஒத்துக் கொண்டு விட்டாராம் கனிகா. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் எடுத்துக்கங்க என்றும் அன்போடு கூறி விட்டாராம்.
மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய கதைதான் பழசிராஜா படமாக மாறி வருகிறது. மலையாளத்தில் தயாரிக்கப்படும் முதல் மெகா பட்ஜெட் படமாம் இது. ஹரிஹரன் இயக்குகிறார். வேணு கேமரா பிடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











