நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. நீச்சல் உடையில் கனிகா.. கிளு கிளு போட்டோஸ்
Recommended Video
சென்னை: நீண்ட நாட்களாக தமிழ் பக்கம் வராமல் வரலாற்று நடிகை கனிகா நீச்சல் உடையில் இருக்கும் படு கவர்ச்சியான புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மலையாள திரைப்பட உலகில் பிரபலமானவர் தான் கனிகா பாடகியாக இருந்து பின்னாளில் நடிகையாக உருவெடுத்தார் கனிகா.

திரைதுறைக்குள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை தேர்ந்தேடுத்து வருவார்கள். ஆனால் கனிகாவை பாடகியாக தான் அனைவருக்கும் தெரியும்.பின் சென்னையில் நடைபெற்ற மாடல் அழகி போட்டியில் பங்கேற்றார். இதுவே இவருக்கு திரையுலகில் இவர் கால் பதிக்க அச்சாரமாக அமைந்தது.
இயக்குனர் சுசி கணேசன் இவரின் புகைப்படத்தை ஒரு பத்திரிக்கையின் அட்டை படத்தில் பார்த்து இவரை தன் படத்தின் துணை கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இது தான் இவருக்கு முதல் திரைப்படம்.

பின் தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார் கனிகா. சேரன் இயக்கி உருவான ஆட்டோகிராப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சேரனுக்கு மனைவியாக நடித்து இருப்பார்.
ஒரு சில காட்சிதான் என்றாலும் கனிகா மிகவும் எதார்த்தமாக நடித்து இருந்தார். இவருக்கு தமிழில் ஒரு நல்ல வரவேற்பைப் பெற்று தந்த திரைப்படம் அஜீத்துடன் நடித்த வரலாறு தான் இதில் அப்பா அஜித்திற்கு ஜோடியாக நடித்தார் கனிகா. இது தான் தமிழில் இவர் நடித்த கடைசி திரைப்படம் ஆகும். அதன் பிறகு இவர் தமிழ் பக்கம் வரவே இல்லை.
பின்னர் மலையாள சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தினார் கனிகா. தொடர்ந்து அங்கு பல திரைப்படங்களில் நடித்தார். இவர் மலையாளத்தில் கடைசியாக மம்முட்டி நடித்த மாமங்கம் திரைப்படத்தில் நடித்தார். இவர் காற்று இப்போது தான் தமிழ் பக்கம் வீச தொடங்கி உள்ளது. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் கனிகா.
இவர் தமிழில் பல கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.மற்றும் இவர் நடித்த பாக்கிய தேவதா படம் பல விருதுகளை குவித்துள்ளது. தற்போது வெளிநாட்டில் முகாம் இட்டுள்ள கனிகா அங்கு நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக உள்ள புகைப்படம் தற்போது வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











