பெங்களூர் விமான நிலையத்தில் மானபங்கம் - கன்னட நடிகை புகார்
பெங்களூர்: விமான நிலையத்தில் அதிகாரிகள் தன்னை மானபங்கம் செய்ததாக கன்னட நடிகை கிரீத்தி கர்பந்தா புகார் கூறியுள்ளார்.
கிரீத்தி கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கன்னட நடிகர் உபேந்திராவுடன் நடித்த ‘சூப்பர் ரங்கா' படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது.
இது தெலுங்கில் ரவிதேஜா நடித்து ஹிட்டான ‘கிக்' (தமிழில் தில்லாலங்கிடி) படத்தின் ரீமேக் ஆகும்.

மேலும் ஆறு கன்னட படங்களில் நடித்து வருகிறார். தெலுங்குப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன.
விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கிரீத்தி கூறுகையில், "பெங்களூர் விமான நிலையத்தில் நான் நின்று கொண்டு இருந்தேன். அப்போது ஏர் இந்தியா விமானத்தின் அதிகாரி ஒருவர் என்னை நெருங்கினார். திடீரென என்னிடம் சில்மிஷங்கள் செய்து கேவலமாக நடந்து கொண்டார்.
நான் தடுத்ததும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார். இதை சில ஏர் இந்தியா ஊழியர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எனககு உதவ வருவார்கள். என எதிர்பார்த்தேன் ஆனால் யாரும் வரவில்லை. எல்லோருமே அவர்களுடைய அதிகாரிக்குத்தான் ஆதரவாக இருந்தார்கள். இந்த சம்பவம் என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது," என்றார்.
இவ்வளவு பிரபலமான ஒரு நடிகைக்கு அவரது ஊர் விமான நிலையத்தில் இப்படி ஒரு அவமானம் நேர்ந்திருப்பது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











