ஸ்கூல்ல படிக்கும் போதே லவ் பண்ணேன்.. அம்மு அபிராமி மனம் திறந்த பேட்டி!
சென்னை: நடிகை அம்மு அபிராமி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் காதல் குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நடிகை அம்மு அபிராமி, பைரவா படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
அதன்பின் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து அனைவருக்கும் தெரியும் முகமாக மாறினார்.
அம்மு அபிராமி: ராட்சசன் படத்தை தொடர்ந்து தேசிய விருது பெற்ற அசுரன் படத்தில் தனுஷின் முறைபெண்ணாக நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதைத்தொடர்ந்து, துப்பாக்கி முனை, யானை, தண்டட்டி, பாபா பிளாக்ஷீப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கண்ணகி படத்தில்: நடிகை அம்மு அபிராமி கண்ணகி படத்தில் 4 ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார். வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அம்மு அபிராமி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் காதல் குறித்தும் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
ஒன் சைட் லவ்: அதில், நான் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை வேறு வேறு என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒரு நடிகையாக என்னுடைய கேரக்டரை வைத்துதான் உங்களை மகிழ்விக்க முடியுமே தவிர, என்னோட வாழ்க்கையை வச்சி பண்ண முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், நான் 10ம் வகுப்பு படிக்கும் போது ஒருவரை ஒன் சைடா தான் லவ் பண்ணேன், அதை மறைக்கக்கூட தெரியாமல் வீட்டில் பங்கமா மாட்டி அடி வாங்கினேன். என் வாழ்க்கையில இந்த விஷயத்தை என்னால மறக்கவே முடியாது.
காதல் திருமணமா: திருமணம் குறித்து பேசிய அம்மு அபிராமி, எனக்கு வரப்போகும் கணவர் இப்படி இருக்கணும், அப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை. ஆனால், என்னை புரிந்து கொண்டால் போதும். காதல் திருமணமாக இருந்தாலும், பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தாலும், இருவருக்கும் இடையே புரிதல் இருந்தால் போதும் என்று அம்மு அபிராமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











