Kanaka: கண்ணழகி கனகாவா இது? அடையாளமே தெரியாமல் மாறிய நடிகை!

சென்னை: திரைத்துறையில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை கனகா, தனது அம்மா இறந்த பிறகு வீட்டை விட்டு வெளியில் வராமலும், மீடியாக்களின் கண்ணில் சிக்காமலும் இருந்து வருகிறார். தற்போது அவரின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் கனகாவை பார்ப்பதற்கே பாவமாக ஆளே அடையாளம் தெரியாத அளவில் இருக்கிறார்.

பழம் பெரும் நடிகை தேவிகாவின் மகளுமான கனகா, கரகாட்டக்காரன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அது கனகாவிற்கு முதல் திரைப்படமாக இருந்தாலும், நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். முதல் படத்திலேயே திறமையான நடிகை என பெயர் எடுத்த கனகா, அதைத் தொடர்ந்து, தங்கமான ராசா, பெரிய வீட்டுப் பண்ணக்காரன், கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேக்குதம்மா, சாமுண்டி என அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்தார்.

kanaka photos
Photo Credit:

நடிகை கனகா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக அதிசயப் பிறவி திரைப்படத்தில் நடித்து பெயர் எடுத்த கனகா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து வந்தார். மலையாளத்தில் இவர் நடித்த காட்ஃபாதர் 400 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி, மலையாளத் திரையுலகில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. ரஜினி, பிரபு, மோகன்லால், மம்முட்டி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து படுபிஸியாக இருந்த கனகா, தனது தாயின் மரணத்திற்கு பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டார்.

kanaka photos

அடையாளமே தெரியல: தாயின் இழப்பால் துயரத்தில் இருந்த கனகா, தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமலே இருந்தார். இதனால், நடிகை குட்டிபத்மினி அண்மையில் அவரை சந்தித்து பேசினார். அப்போது, 'நீங்கள் ஆன்ட்டி இல்லை, அக்கா உங்களை நான் எப்படி மறப்பேன்?'என்றாக குட்டி பத்மினி அவரின் போட்டோவை ஷேர் செய்து பதிவிட்டு இருந்தார். அந்த போட்டோவை பார்த்த பலரும் கனகா இது என அனைவரும் நினைக்கும் அளவிற்கு உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். தற்போது, கனகாவின் போட்டோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த போட்டோவில் கனகா அடையாளமே தெரியாத அளவிற்கு தலையில் ஒரு துணியை கட்டிக்கொண்டு, நெற்றியில் பெரிய போட்டு வைத்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அய்யோ கண்ணழகி கனகாவா இப்படி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X