2 நடிகைகளின் உடையை பார்த்து கடவுளே, கடவுளேன்னு பயந்த ரசிகர்கள்
Recommended Video

மும்பை: விருது விழா ஒன்றுக்கு நடிகைகள் கரீனா கபூர் மற்றும் ஆலியா பட் அணிந்து வந்த உடை தான் பார்வையாளர்களை கவர்ந்தது.
வோக் உமன் ஆஃப் தி இயர் விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் பிரபலங்கள் கரீனா கபூர் கான், ஆலியா பட், ராதிகா ஆப்தே, ஜான்வி கபூர், கரிஷ்மா கபூர், ஆயுஷ்மான் குரானா, கரண் ஜோஹார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வழக்கம் போன்று அவர்கள் அனைவரும் அழகான உடை அணிந்து வந்தனர்.

கரீனா கபூர்
ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் சிக்கென்று இருக்கும் நடிகை கரீனா கபூர் கான் லோ கட் கவுன் அணிந்து அழகாக வந்திருந்தார். அந்த கவுன் அணிந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அது தெரிந்தும் அப்படி ஒரு கவுனை அணிந்து வந்து அசத்தினார்.

ஆலியா பட்
சீ த்ரூ கவுன் அணிந்து வந்திருந்தார் நடிகை ஆலியா பட். ரிஸ்கான உடை என்றாலும் அவருக்கு அது அழகாகத் தான் இருந்தது. ஆலியா நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார். அவருக்கும், ரன்பிருக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரிஷ்மா
கரீனாவின் அக்காவும், நடிகையுமான கரிஷ்மா கபூர் அழகான உடை அணிந்து வந்திருந்தார். ஆனால் ஆள் பார்க்க எலும்பும், தோலுமாக இருந்தது அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

ஜான்வி கபூர்
ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூருக்கு அம்மா போன்றே டிரஸ்ஸிங் சென்ஸ் உள்ளது. அழகான கவுன் அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஜான்வி.

ப்ரீத்தி
இருக்க இருக்க இந்த ப்ரீத்தி ஜிந்தாவுக்கு மட்டும் வயது பின்னோக்கி செல்கிறது போன்று. என்றும் இளமையாகவே உள்ளார். எங்கு சென்றாலும் அனைவரையும் தன்னை திரும்பி பார்க்க வைத்துவிடுகிறார்.


Click it and Unblock the Notifications