இரண்டு குழந்தைக்கு அம்மாவான கரினா கபூர் பிகினியில் என்னம்மா மிரட்டுறாரு பாருங்க.. மாலத்தீவில் மஜா!

மும்பை: தன்னை சுற்றி வலம் வந்த சர்ச்சைகளில் இருந்து விலகி மாலத்தீவுக்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளார் நடிகை கரீனா கபூர்.

40 வயதை கடந்த கரீனா கபூர் சமீபத்தில் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார்.

முதல் குழந்தைக்கு தைமூர் என பெயர் சூட்டிய அவர், இரண்டாவது குழந்தைக்கு ஜெகாங்கீர் என பெயர் சூட்டியதும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

அபிஷேக்குடன் அறிமுகம்

அபிஷேக்குடன் அறிமுகம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் கடந்த 2000ம் ஆண்டு Refugee எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அந்த படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை கரீனா கபூர்.

மூன்று கான்களுடன்

மூன்று கான்களுடன்

முன்னணி பாலிவுட் நடிகர்கள் அனைவரிடமும் நடித்து அசத்தி வருகிறார் கரீனா கபூர். பாலிவுட்டின் மூன்று கான் நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான் மற்றும் சல்மான் கான்களுடன் பல படங்களில் இவர் நடித்துள்ளார். 21 ஆண்டுகளாக பாலிவுட்டில் இன்னமும் லீடு ஹீரோயினாகவே நடித்து வருகிறார் கரீனா கபூர்.

அமீர்கான் ஜோடி

அமீர்கான் ஜோடி

அமீர்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்த 3 இடியட்ஸ் படத்தில் இவர் தான் நாயகி. 3 இடியட்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது அமீர்கான் நடித்து வரும் ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக்கான லால் சிங் சத்தா படத்திலும் அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்து வருகிறார்.

சைஃப் அலி கான் மனைவி

சைஃப் அலி கான் மனைவி

பாலிவுட் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த கரீனா கபூர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சைஃப் அலி கான் தனது முதல் மனைவியான அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்த நிலையில் கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார்.

சாரா அலி கான்

சாரா அலி கான்

சைஃப் அலி கானின் முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகள் சாரா அலி கான் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக அசத்தி வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் படமான அட்ரங்கி ரே படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா அலி கான் நடித்துள்ளார். போதைப் பொருள் விவகாரத்திலும் சமீபத்தில் சாரா அலி கான் பெயர் சிக்கி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

பிரெக்னன்ஸி பைபிள்

பிரெக்னன்ஸி பைபிள்

கடந்த 2016ம் ஆண்டு கரீனா கபூர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தைமூர் என பெயர் சூட்டி இருந்தார். தற்போது 2021ம் ஆண்டு இன்னொரு ஆண் குழந்தைக்கும் அம்மாவான கரீனா கபூர் இரண்டு பேரு கால அனுபவங்களையும் தொகுத்து பிரெக்னன்ஸி பைபிள் எனும் புத்தகத்தை வெளியிட்டார். பைபிள் என கரினா கபூர் தனது புத்தகத்திற்கு பெயர் வைத்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதே போல இரண்டாவது குழந்தைக்கு அவர் வைத்த ஜெகாங்கீர் என்கிற பெயரும் மீண்டும் சர்ச்சை வளையத்துக்குள் கரீனா கபூரை கொண்டு வந்து விட்டது.

Recommended Video

நாக்கு முக்கா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி மகள்...தீயாய் வைரலாகும் வீடியோ
மாலத்தீவு சுற்றுலா

மாலத்தீவு சுற்றுலா

பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் சைஃப் அலி கானும் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் நடித்து வரும் மனைவி கரீனா கபூரும் தனது குடும்பத்தோடு தற்போது மாலத்தீவுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளனர். தங்களை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் சுழன்று வரும் நிலையில், கொஞ்சம் நிம்மதியாக ஓய்வெடுக்க மாலத்தீவை அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

பிகினியில் கரீனா

பிகினியில் கரீனா

சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் டாப்சி உள்ளிட்ட நடிகைகள் பிகினி போட்டோக்களை போட்டு பாலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில், அதே ஃபார்முலாவை தானும் செய்து கொஞ்சம் சர்ச்சைகளில் இருந்து தப்பிக்கலாம் என நடிகை கரீனா கபூர் முடிவெடுத்தாரோ என்னவோ தெரியவில்லை, திடீரென ஒரு சூப்பர் ஹாட் பிகினி போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இணையத்தில் டிரெண்டாகி வருகிறார்.

செல்ஃபி சீரிஸ்

செல்ஃபி சீரிஸ்

கருப்பு நிற பிகினியில் ஃபயர் எமோஜிக்களை போட்டு ஹாட்னஸ் அலர்ட் கொடுத்துள்ள நடிகை கரீனா கபூர், அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக Selfie Series Continues எனப் போட்டு இன்னும் ஏகப்பட்ட பிகினி செல்ஃபிக்கள் வரவிருக்கிறது என்கிற ஹாட் அப்டேட்டையும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X