நல்லா சாப்பிடுவேன், நல்லா ஒர்க் அவுட் பண்ணுவேன்: கரீனா கபூர்
மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஃபிட்டாக இருக்க இந்திய உணவையே அதிகம் சாப்பிடுகிறாராம்.
பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு 32 வயதாகிவிட்டாலும் இன்னும் சிக்கென்று இருக்கிறார். அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முன்னணி இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர்.
கரீனா இப்படி ஃபிட்டாக இருக்க காரணம் என்னவென்று அவரே தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் சைஸ் ஜீரோவான நடிகை கரீனா என்பது குறிப்பிடத்தக்கது.

சப்பாத்தி, தால், நெய்
சாலட், ஜூஸை விட சிம்பிளான இந்திய உணவுகளான சப்பாதி, தால், நெய், சாதம் ஆகியவற்றை தான் கரீனா சாப்பிடுகிறாராம்.

பாட்டி இன்னும் ஃபிட்
எனது பாட்டிக்கு 84 வயதாகிறது. அவர் அதிகம் நெய் சாப்பிடுவார். அவர் இன்னும் ஃபிட்டாகவும், அழகாகவும் உள்ளார். நெய்யின் நன்மைகள் பல உள்ளன என்றார் கரீனா.

பட்டினி கிடக்க மாட்டேன்
ஜங்க் உணவுகளை தவிர்த்து விட்டு சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பது எனக்கு பிடிக்காது. நான்றாக சாப்பிட்டுவிட்டு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வேன் என்று கரீனா தெரிவித்துள்ளார்.

சைவ பிரியை
எனது கணவர் சைஃப் அசைவ பிரியர். ஆனால் நான் சைவ பிரியை. காலையில் எழுந்த உடன் வாழைப்பழ மில்க் ஷேக், அதன் பிறகு காபி குடிப்பேன் என்று கரீனா கூறினார்.

அப்போ டயட் பிஸ்கட்?
அண்மையில் படப்பிடிப்பின்போது மதிய உணவு வேளையில் சாப்பிட வைத்திருந்த டயட் பிஸ்கட் காணாமல் போனதால் கரீனா டென்ஷனாகி எதுவும் சாப்பிடாமல் இருந்தார் என்றும், பிறகு அந்த பிஸ்கட் பாக்கெட் கிடைத்த பிறகு அதில் இருந்து சில பிஸ்கட்டுகளை சாப்பிட்டார் என்றும் செய்தி வந்தது. ஆனால் கரீனாவோ சாதம், சப்பாத்தி, நெய் சாப்பிடுவதாக கூறுகிறாரே.


Click it and Unblock the Notifications











