இப்படி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேனே: நடிகை கவலை
மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடிக்க வந்ததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தியதை நினைத்து கவலைப்படுகிறார்.
பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை ரந்தீர் கபூர் ஒரு நடிகர். கரீனாவின் அக்கா தான் நடிகை கரிஷ்மா கபூர்.
இந்நிலையில் கரீனா பாலிவுட் நடிகர் சைப் அலி கானை திருமணம் செய்துள்ளார். சைபின் தாய் ஷர்மிளா மற்றும் தங்கை சோஹா ஆகியோரும் நடிகைகள் தான்.

அமிதாப் நிகழ்ச்சி
கரீனா தான் இம்ரான் கானுடன் சேர்ந்து நடித்துள்ள கோரி தேரே பியார் மெய்ன் படத்தை விளம்பரப்படுத்த அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அமிதாப் கரீனாவுடன் டான்ஸ் ஆடினார்.

சட்டம் படித்த கரீனா
கரீனா கபூர் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் தனது 20வது வயதில் படங்களில் நடிக்கத் துவங்கினார். இதையடுத்து படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

கவலை
படங்களில் அதிக ஆர்வமாக இருந்ததால் என்னால் படிக்க முடியவில்லை. ஆனால் அதற்காக தற்போது வருத்தப்படுகிறேன் என்று கரீனா அமிதாப் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

படிப்பு முக்கியம்
படிப்பது முக்கியும். நிறைய படிக்காவிட்டாலும் கொஞ்சாமவது படித்திருக்க வேண்டும். நம் குழந்தைகளை படிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என்று கரீனா கபூர் கான் தெரிவித்தார். கோரி தேரே பியார் மெய்ன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











