துரத்தும் பாபரசிகள் தொல்லை.. கடும் பாதிப்புக்கு ஆளான மகன்.. கவலையோடு கெஞ்சிக் கேட்கும் பிரபல நடிகை!
பாபரசி கலாச்சாரத்தால் நடிகை கரீனா கபூரின் மகன் தைமூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான்.
Recommended Video
மும்பை: பாபரசி கலாச்சாரத்தால் தனது மகன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.
ஊடகத் துறையைச் சேர்ந்த புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள், சினிமா பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களை பின்தொடர்ந்து சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தான் பாபரசி கலாச்சாரம் என அழைப்பார்கள். இந்த பாபரசி கலாச்சாரம் பாலிவுட்டில் மிகவும் அதிகம்.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன், ஷாருக்கான் - கவுரி உள்ளிட்ட பிரபல நட்சத்திர ஜோடிகளின் வாரிசுகள் இந்த பாபரசி கலாச்சாரத்தால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் தற்போது பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடியான கரீனா கபூர் - சைப் அலி கானின் மகன் தைமூரும் சேர்ந்துள்ளான்.

இதுகுறித்து இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த கரீனா கபூர், "பாபரசி கலாச்சாரத்தால் எனது மகன் தைமூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான். தைமூருக்கு அவனை போட்டோ எடுப்பதே பிடிக்காமல் போய்விட்டது. எங்களுக்கு கூட போஸ் கொடுக்க மாட்டேன் என்கிறான்.

பாபரசி கலாச்சாரம் இப்போது அதிகமாகிவிட்டது. எங்களுடைய குழந்தைகள், பாதுகாப்பாகவும், அவர் இஷ்டப்படியும் வளர வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எங்கு சென்றாலும் துரத்தி வந்து போட்டோ எடுக்கப்படுவதால், அவர்களுடைய சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கும், எங்கள் குழந்தைகளுக்கும் சிறிது தனிமை வேண்டும் என தான் நாங்கள் கேட்கிறோம்", என கரீனா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











