சிங்கம் 2 இந்தி ரீமேக்கில் காஜல் இல்லை: காய்ச்சலுடன் நடித்த கரீனா கபூர்
மும்பை: சிங்கம் 2 படத்தின் இந்தி ரீமேக்கில் கரீனா கபூர் நடிக்கிறார். படத்திற்கு சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
சூர்யா நடித்த சிங்கம் படம் சிங்ஹம் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. படத்தை மசாலா படங்களை தருவதில் வல்லவரான ரோஹித் ஷெட்டி இயக்கினார். இந்த படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார்.
தமிழைப் போன்றே இந்தியிலும் சிங்கம் ஹிட்டானது.

சிங்கம் 2
சிங்கம் 2 படத்தையும் ரோஹித் ஷெட்டி இந்தியில் ரீமேக் செய்கிறார். படத்திற்கு சிங்ஹம் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கரீனா கபூர்
சிங்ஹம் ரிட்டர்ன்ஸ் படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக கரீனா கபூர் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டது.

வெற்றிக் கூட்டணி
கோல்மால் சீரிஸ் வெற்றிக் கூட்டணியான அஜய் தேவ்கன், கரீனா கபூர், ரோஹித் ஷெட்டி ஆகியோர் சிங்ஹம் ரிட்டர்ன்ஸில் ஒன்று சேர்ந்துள்ளனர். அதனால் இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் பிச்சு உதறும் என்று கூறலாம்.

காய்ச்சல்
சிங்ஹம் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்பு ரோஹித்துக்கு பிடித்த இடமான கோவாவில் நடந்து வருகிறது. அப்போது கரீனாவுக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தும் அதை பொருட்படுத்தாதது படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

குடும்பம்
அஜய் எனக்கு சகோதரர் போன்று. கரீனா குடும்பத்தில் ஒருவர் மாதிரி. அதனால் இது படப்பிடிப்பு போன்று இல்லாமல் ஏதோ குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளது போல் இருக்கிறது என்று ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











