ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கசங்கி கண்ணீர் விட்ட நடிகை
ஜெய்பூர்: பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ரசிகர்கள் கூட்டம் அவரை சுற்றி வளைத்துவிட்டது. செய்வது அறியாது கரீனா அழுதுவிட்டார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர் இம்ரான் கானுடன் தாங்கள் நடித்த கோரி தேரே பியார் மெய்ன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜெய்பூர் சென்றார். அங்கு கரீனாவை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கை குலுக்க, புகைப்படம் எடுக்க, ஆட்டோகிராப் வாங்க முந்தியடித்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த கரீனாவுக்கு கண்ணீர் வந்துவிட்டது. சிலர் அவரை பிடித்துத் தள்ளவும் செய்துள்ளனர்.
பின்னர் அவரது பாதுகாவலர்கள் ஒரு வழியாக ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து கரீனாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
முன்னதாக பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே ஆகியோர் அண்மையில் ரசிகர்களிடம் சிக்கித் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












