»   »  கர்ப்ப விவகாரம்: நடிகை தீபிகா மீது கொலவெறியில் கரீனா கபூர்?

கர்ப்ப விவகாரம்: நடிகை தீபிகா மீது கொலவெறியில் கரீனா கபூர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் சக நடிகையான தீபிகா படுகோனே மீது கோபத்தில் உள்ளாராம்.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக உள்ளார். முதலில் குழந்தையே வேண்டாம் என்று கூறி வந்த கரீனா இரண்டு ஆண்டுகள் கழித்து பார்க்கலாம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் கர்ப்பமாக உள்ளார்.

கர்ப்பிணி கரீனா சக நடிகையான தீபிகா படுகோனே மீது கோபத்தில் உள்ளாராம்.

தீபிகா

தீபிகா

நடிகர் ரன்வீர் சிங்கை காதலிக்கும் தீபிகா படுகோனேவுக்கு நிச்சியதார்த்தம் நடந்துவிட்டது என்றும், அவருக்கு விரைவில் திருமணம் என்றும் பாலிவுட்டில் பேச்சாக கிடந்தது. இது குறித்து அறிந்த தீபிகா விளக்கம் அளித்தார்.

திருமணம் இல்லை

திருமணம் இல்லை

நான் திருமணம் செய்து கொள்ளப் போவதும் இல்லை, நான் கர்ப்பமாகவும் இல்லை என்று கூறி தன்னைப் பற்றி கிசுகிசுத்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார் தீபிகா படுகோனே.

கரீனா

கரீனா

தீபிகாவுக்கு திருமணம் என்று தானே பேசப்பட்டது. அவர் எதற்காக நான் கர்ப்பமாகவும் இல்லை என்றார். கர்ப்பமாக இருப்பது தவறா என்று தீபிகா மீது கரீனா கோபத்தில் உள்ளாராம்.

பிரசவம்

பிரசவம்

கரீனா இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தனது குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்துள்ளாராம். மும்பையில் இல்லாத மருத்துவமனையா என்று கேட்டதற்கு மீடியாக்களிடம் இருந்து தள்ளி இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Kareena Kapoor Khan is reportedly upset with fellow actress Deepika Padukone for talking about pregnancy.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil