அய்யய்யோ நான் சைவம்! - அலறும் கரீனா

By Shankar

Kareena Kapoor
நிஜத்தில் மட்டுமல்ல... சினிமாவிலும் நான் அசைவம் சாப்பிட மாட்டேன், என பிடிவாதமாக மறுத்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர்.

சமீபத்தில் ஒரு இந்திப் படத்தில் முட்டை சாப்பிடுவது போல காட்சி வைத்தபோது, அதில் நடிக்கவே மாட்டேன் என்று அலறியடித்துக் கொண்டு கேரவனுக்கு ஓடினாராம் கரீனா.

இதுகுறித்து பின்னர் அவர் கூறுகையில், "எனக்கு அசைவம் பிடிக்காது. சினிமாவில் அசைவம் சாப்பிடுவதுபோல் நடிக்க வற்புறுத்துகின்றனர். நான் தொடர்ந்து மறுத்து வருகிறேன்.

காட்சி ஒரிஜினலாக வர இந்த காட்சியில் நடிக்க கூடாதா என்று கேட்கின்றனர். அது பெரிய பாவம்.

சமீபத்தில் கூட பெயர் வைக்காத இந்திப் படமொன்றில் நடித்த போது, அதில் முட்டை சாப்பிடுவது போன்ற காட்சியில் நடிக்க இயக்குனர் வற்புறுத்தினார்.

நான் முடியாது என்றேன். முட்டை சைவம்தான் என்றார் இயக்குனர். ஒரு உடலில் இருந்து வருவதால் அதை சைவமாக கருத முடியாது என்று கூறி விட்டேன். முட்டையை கடிக்க வேண்டாம் கடிப்பதுபோல் பாவனை செய்யுங்கள் என்றனர்.

அதையும் நான் செய்யவில்லை. பிறகு கேக்கை முட்டை போல் உருட்டி நான் சாப்பிடுவதுபோல் படம் எடுத்தனர். பாதி சைவமாகவும் பாதி அசைவமாகவும் நான் இருக்க மாட்டேன். அசைவத்தை தொடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X