சூப்பர் ஸ்டார்னா நான் ஏன் அட்ஜஸ்ட் பண்ணனும்: 'நோ' சொன்ன நடிகை
Recommended Video

மும்பை: ஷாருக்கானுக்காக எல்லாம் அட்ஜஸ்ட் பண்ண முடியாது என்று நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.
விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்குகிறார்கள். இந்த படத்தில் ஆமீர் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் படத்தில் இருந்து விலகவே ஷாருக்கானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஹீரோயின் கிடைப்பது தான் கடினமாக உள்ளது.

சோப்ரா
ஷாருக்கான் ஜோடியாக நடிக்குமாறு ப்ரியங்கா சோப்ரா மற்றும் கரீனா கபூரிடம் கேட்டுள்ளனர். ஆனால் இருவருமே ஒரே காரணத்தை சொல்லி நடிக்க மறுத்துவிட்டார்களாம்.

கரீனா
இது ராகேஷ் சர்மா பற்றிய படம். அதனால் படம் முழுக்க ஷாருக்கானை தான் காட்டுவீர்கள். ஹீரோயின் என்ற பெயரில் ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்து நடிக்க விரும்பவில்லை என்று கரீனா, ப்ரியங்கா தெரிவித்தார்களாம்.

அட்ஜஸ்ட்
ஷாருக்கான் நடிக்கிறார் என்பதற்காக எல்லாம் அட்ஜஸ்ட் பண்ண முடியாது என்றாராம் கரீனா. ஷாருக்கானுக்கும், ப்ரியங்கா சோப்ராவுக்கும் இடையே ஒரு காலத்தில் நெருக்கம் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதனால் கூட ப்ரியங்கா நடிக்க மறுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மனைவி
ப்ரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து இனிமேல் நடிக்கக் கூடாது என ஷாருக்கானுக்கு அவரின் மனைவி கவுரி உத்தரவு போட்டுள்ளாராம். ஹாலிவுட்டில் கவனம் செலுத்தும் ப்ரியங்கா சல்மான் கானின் பாரத் படம் மூலம் மீண்டும் பாலிவுட் வந்துள்ளார்.

சம்பளம்
சல்மான் கான் படத்தில் நடிக்க ப்ரியங்கா சோப்ராவுக்கு ரூ. 12 கோடி சம்பளமாம். ப்ரியங்காவும், அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸும் காதலிப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலம் இல்லாதவர்
எப்படியும் படம் முழுக்க ஷாருக்கான் தான் வருவார் என்பதால் புதுமுக நடிகை அல்லது பிரபலமில்லாத நடிகை ஒருவரை ஹீரோயினாக்குவது என்று முடிவு செய்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











