கர்ணன் பட நடிகைக்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?
சென்னை: கர்ணன் திரைப்படத்தின் மூலம் நம் மனதை கவர்ந்த மலையாள நடிகை ரஜிஷா விஜயனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது தகவல் வெளியாகி உள்ளது. காதலருடன் இருக்கும் போட்டோவை இணையத்தில் பகிர்ந்ததை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரஜிஷா விஜயன். இவர் அனுராக கரிக்கின் வெள்ளம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.மேலும், ஜூன் என்ற திரைப்படத்தில் அழகாக நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்த ரஜிஷா விஜயன். அப்படத்தில் திரௌபதை கதாபாத்திரத்தில், தனது கதாபாத்திரத்தின் அழுத்தம் உணர்ந்து நடித்திருந்தார். இதையடுத்து கார்த்தியின் சர்தார் படத்திலும், சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
விரைவில் திருமணம்: தொடர்ந்து மலையாளத் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் ரஜிஷா விஜயனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை காதலித்துத் வருவதாக கூறப்படுகிறது. இருவரும் ஜோடியாக சில இடங்களில் சுற்றிய போட்டோக்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இவர்கள் காதலிப்பதாக செய்திகள் பரவின.

ஆனால், இருவரும் காதல் குறித்து மவுனம் காத்து வந்த நிலையில், தற்போது ரஜிஷா, இருவரும் ஜோடியாக கொண்ட போட்டோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் இருவருமே தங்கள் காதலை உறுதி செய்துள்ளனர். இதனால், விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ரஜிஷா விஜயனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பைசன்: நடிகை ரஜிஷா விஜயன், மாரி செல்வராஜ் இயக்கும் 'பைசன் காளமாடன்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











