டார்ஜிலிங்கில் இயற்கை எழில் கொஞ்ச ரொமான்ஸ்.. செம ஸ்பீடா இருக்காங்க.. ஓ அதுதான் விசயமா
மும்பை: புஷ்பா 2 படத்தில் செ ஆட்டம் போட்ட ஸ்ரீலீலா பராச்க்தி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இதனிடையே, பாலிவுட் நடிகரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த செய்தி உண்மையாகும் வகையில் இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் சமூகவலைதளத்தை ஆக்கிரமத்திருக்கிறது. இதை பார்த்து நெட்டிசன்கள் என்னப்பா வச்ச கண்ணு எடுக்காம இப்படி பார்க்கிறார் கமெண்ட் அடிக்க தொடங்கிவிட்டனர். ஆஹா காதல் பொருத்தம் நல்லா இருக்கே என்றும் கூறியுள்ளனர்.
கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீலீலா நடன அசைவுகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அவர், ரவிதேஜா, மகேஷ் பாபு என டாப் ஸ்டார் படங்களில் நடித்து குத்தாட்டம் போட்டிருக்கிறார். தென்னிந்திய ரசிகர்கள் அவரை டான்ஸர் குயின் என்றே அழைக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க புஷ்பா 2 படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டும் நடனம் ஆடி அசத்தினார். சப்புனு அரைவேன் ராஜா பாட்டும் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. அதைத்தொடர்ந்து தமிழில் சுதா கொங்காரா இயக்கும் பராசக்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீலீலா. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் பிஸியாக ஒரு பாலிவுட் பிரபலத்தை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

காதல்: தனுஷ் கூறுவது போல் அம்மானா யாருக்குதான் பிடிக்காது என்பது போல காதல் வந்தால் நேரம் மாறும், தபால்காரன் தெய்வம் ஆவான், வெட்கம் வரும் என்று கூறுவதை போல இப்போது ஸ்ரீலீலாவிற்கு அந்த காதல் வந்திருக்கிறதாம். நேரம் காலம் பார்க்காமல் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனை காதலித்து வருகிறாராம். இருவருக்கும் கெமிஸ்ட்ரி நல்லவிதமாக பொருந்து போகிறதாம். பாலிவுட் இயக்குநர் அனுராக் பாசு இயக்கும் படத்தில் கார்த்திக் ஆர்யன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் பல விசயங்கள் ஒத்துப்போவதால் இருவரும் டேட்டிங் செல்வதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அண்மையில் ஸ்ரீலீலா கார்த்திக் ஆர்யன் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது. ஒரே படத்தில் இருவரும் நடிப்பதால் நட்பாக இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர்.ஆனால், அவரது அம்மா சினிமா விருது விழாவில் பட்டுனு போட்டு மொத்தத்தையும் சொல்லிவிட்டார். என் வீ்ட்டிற்கு வரும் மருமகள் கார்த்திக் ஆர்யனை புரிந்துகொள்ளும் நபராக இருக்க வேண்டும். அவர் மருத்துவம் படித்தவராக இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். அவர் எதை காரணம் வைத்து பேசினார் என்பது தெரியவில்லை. ஆனால், நடப்பதெல்லாம் பார்த்தால் அதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் பேச தொடங்கினர். நடிகை ஸ்ரீலீலாவும் ஒரு டாக்டர் தான். அமெரிக்காவில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தை மதித்து நடக்கிறார்.

கார்த்திக் ஆர்யனும் - ஸ்ரீலீலாவும் டேட்டிங்கை தாண்டி காதலை சொல்லிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது அதை உறுதி செய்யும் வகையில் கார்த்திக் ஆர்யன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்ரீலீலாவுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில், இயற்கை எழில் கொஞ்சும் டார்ஜிலிங்கில் கார்த்திக் ஆர்யனும் - ஸ்ரீலீலாவும் ஒரே பெஞ்சில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது கார்த்திக் வைத்த கண் எடுக்காமல் ஸ்ரீலீலாவை பார்வையாலே வசியம் செய்கிறார். மேலும் நீ என் உயிர் என்றும் பதிவிட்டிருக்கிறார். இது படப்படிப்பிற்காகவா அல்லது காதலை அதிகாரப்பூர்வமாக ரசிகர்களுக்கு தெரிவிப்பதற்காக பதிவிட்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை. விரைவில் நல்ல செய்தி வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











