முதன்முறையாக அம்மாவும் மகளும்... கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லிஸி- கல்யாணி பிரியதர்ஷன்

By

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகை லிஸியும் அவர் மகளும் ஹீரோயினுமான கல்யாணி பிரியதர்ஷனும் நடித்துள்ளனர்.

பீட்ஸா, ஜிகிர்தண்டா, இறைவி, பேட்ட உட்பட சில படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இப்போது தனுஷ் நடித்துள்ள படத்தை இயக்கியுள்ளார்.

இவர் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலம், முதன்முறையாக விளம்பர படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

நடிகை லிஸி

நடிகை லிஸி

இதில் நடிகை லிஸி நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயினான இவர், இயக்குனர் பிரியதர்ஷனின் முன்னாள் மனைவி. அவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர், சில வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்தார்.

ஹீரோயின்

ஹீரோயின்

அதற்கு பின் சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகள் கல்யாணி. இவர் சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

மரைக்கார்

மரைக்கார்

அதற்கு முன் தெலுங்கில் ஹலோ, சித்ரலஹிரி, ரணரங்கம் படங்களில் நடித்துள்ளார். இப்போது மலையாளத்தில் மரக்கார் படத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார்.

விளம்பர படம்

விளம்பர படம்

கல்யாணியையும் லிஸியையும் ஒன்றாக நடிக்க வைத்து, பிரபல ஜவுளி கடை விளம்பரத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். அவர் இயக்கிய முதல் விளம்பர படம் இது என்று கூறப்படுகிறது. இந்த விளம்பர படம் விரைவில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X