ஹீரோவுக்கு ஈக்குவலா எனக்கும்... - கார்த்திகா போடும் கண்டிஷன்
ஹீரோவுக்கு இணையான வேடமாக இருந்தால் மட்டுமே இனி நடிப்பேன் என்று பகீர் நிபந்தனை விதிக்க ஆரம்பித்துள்ளாராம் கார்த்திகா.
ஒரே ஒரு படம்தான் நடித்துள்ளார் கார்த்திகா. அந்தப் படம் வெற்றிப் படம்தான் என்றாலும், அதில் இவருக்குப் பெரிய பங்கில்லை. இரு நாயகிகளில் ஒருவராகத்தான் வந்தார் கார்த்திகா.
இப்போது பாரதிராஜா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளைக் கேட்கும் அவர், "அந்தப் படங்களில் ஹீரோவுக்கு ஈக்குவலாக எனக்கும் ரோல் இருந்தா நடிக்கிறேன். இல்லேன்னா வேண்டாம்," என்கிறாராம்.
இப்போது அவர் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் ரீமேக்கில் விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
மலையாளத்தில் வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்ட அவர், தெலுங்கு, தமிழ் மட்டும் போதும் என்று கூறுகிறாராம்!
Comments


Click it and Unblock the Notifications
