வீட்டு கரண்ட் பில் ஒரு லட்சம்.. அதிர்ந்து போன பிரபல நடிகை!

மும்பை : சில நாட்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னா அவரது வீட்டு கரண்ட் பில் அதிகமாக வந்துள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிலையில் தற்போது
மற்றுமொரு தமிழ் நடிகையும் பதிவிட்டிருக்கிறார்.

நடிகை ராதாவின் மகளும் கோ பட கதாநாயகியுமான கார்த்திகா நாயர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு வழக்கத்தைவிட அதிகமாக கரண்ட் பில் வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதில் தன்னுடைய வீட்டு கரண்ட் பில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை பில் செய்யப்பட்டுள்ளது என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

கரண்ட் பில்

கரண்ட் பில்

தமிழில் கோ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் கார்த்திகா நாயர்.நடிகை ராதாவின் மகளான இவர் தொடர்ந்து சில தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.தற்போதுள்ள சூழல் காரணமாக மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்து வருகிறார் கார்த்திகா. சமீபத்தில் கரண்ட் பில் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதில் கிட்டத்தட்ட ரூ 1 லட்சம் வரை பில் செய்யப்பட்டுள்ளது என அதிர்ந்து போயுள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில்

ட்விட்டர் பக்கத்தில்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவர் ஜூன் மாதத்தில் தனக்கு கிட்ட தட்ட ரூ 1 லட்சம் கரண்ட் பில் வந்துள்ளது என்றும் மின்சார துறையினர் இப்படி கொள்ளையடிக்கின்றனர் என்றும் பதிவிட்டுள்ளார்.மேலும் இதுபோல இந்த லாக்டவுன் நேரத்தில் மும்பையில் பலருக்கும் நடந்திருக்கிறது என்று கேள்விப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக கரண்ட் பில்

அதிக கரண்ட் பில்

இதை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் பிரசன்னா சில வாரங்களுக்கு முன் இதே போன்று ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் ஊரடங்கு நேரத்தில் தனக்கு அதிக கரண்ட் பில் வந்துள்ளதாகவும் இது போல் உங்களில் யாருக்காவது வந்திருக்கிறதா என்று பிரசன்னா ட்வீட் செய்திருந்தார்.

விளக்கமளித்துள்ளனர்

விளக்கமளித்துள்ளனர்

இதனை தொடர்ந்து தமிழக மின்சாரத்துறை எப்படி மின்கணக்குகள் எடுக்கப்படுகிறது என்ற அறிக்கையை வெளியிட்டது.மேலும் பிரசன்னா மார்ச் மாதத்திற்கான கரண்ட் பில்லை செலுத்தாததால் அவருக்கு இந்த மாதம் பில் கூடுதலாக வந்துள்ளது என்றும் தமிழ்நாடு மின்சார துறை சார்பாக விளக்கமளித்துள்ளனர்.

கட்டிவிட்டேன்

கட்டிவிட்டேன்

இதற்கு பதிலளித்த பிரசன்னா எப்போதும் ரீடிங் எடுத்த 10 நாட்களிலேயே கட்டணத்தை செலுத்திவிடுவோம். மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் இந்த குழப்பம் வந்துள்ளது எனினும் மொத்த தொகையையும் இப்போது கட்டிவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

Recommended Video

அரசை குறிவைத்த நடிகர் பிரசன்னா
வருத்தம்

வருத்தம்

மேலும் இந்த ட்வீட் அரசையோ மின்வாரியத்தையோ குறைசொல்லும் நோக்கில் பதிவிடப்படவில்லை இதனால் மக்கள் யாருக்காவது உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் இதை இங்கு பதிவிடப்பட்டேன். இது மின்சாரதுறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் மூலம் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னா தெரிவித்திருந்தார்.

கவலைப்படுகிறீர்கள்

கவலைப்படுகிறீர்கள்

இவ்வாறு நடிகை கார்த்திகா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் அதை பார்த்த ஒருவர் அங்கே உங்களிடம் ஹோட்டல் உள்ளதா, மிகவும் கவலைப்படுகிறீர்கள்? என்று கேட்டதற்கு என்னுடைய ஹோட்டல் கரண்ட் பில் ஆக இருக்கவேண்டும் என்றுதான் எனக்கு ஆசை ஆனால் இது என்னுடைய வீட்டு கரண்ட் பில் என சிரித்தபடி கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X