வீடியோ கேம் வீராங்கனை லாரா கிராப்ட் மாதிரி... - 'புறம்போக்கு' கார்த்திகாவின் ஆக்ஷன் ரோல்
எஸ்பி ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் அட்டகாசமான ஆக்ஷன் ரோலில் நடிக்கிறாராம் ராதா மகள் கார்த்திகா.
இதை அவரே எல்லோருக்கும் பிரஸ் ரிலீஸ் அனுப்பியும் பேட்டி மூலமும் சொல்லி வருகிறார்.
அன்னக்கொடியில் அதலபாதாளத்துக்குப் போய்விட்ட கார்த்திகாவுக்கு இப்போதுள்ள ஒரே வாய்ப்பு இந்த புறம்போக்குதான்.

ஒரே ஹீரோயின் மூணு ஹீரோக்கள்
இதில் விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம் என மூன்று ஹீரோக்கள். ஆனால் நாயகி கார்த்திகா மட்டுமே.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு குலுமணாலியில் தொடங்கி நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூரில் நடக்கவிருக்கிறதாம்.

லாரா கிராப்ட்
இதுகுறித்து நடிகை கார்த்திகா கூறும்போது, "இந்த படத்தில் எனக்கு ஆக்ஷன் காட்சிகளில் திறமை காட்டக்கூடிய கதாபாத்திரம்.
இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் வீடியோ கேம் மூலம் பிரசித்தி பெற்ற வீராங்கனை லாரா கிராப்டை சார்ந்து இருக்கும்.

டேப் டான்ஸ்
இதுதவிர இப்படத்தில் நான் ஆடியிருக்கும் டேப் டான்ஸ், எனக்கு நடனத்திலும் நல்ல பெயரை பெற்றுத் தரும். என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குனர் ஜனநாதனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சரித்திர பேராசிரியர்
அவர் என் பார்வையில் இயக்குநராக மட்டுமல்ல, ஒரு சரித்திர பேராசிரியராகவும் தெரிகிறார். அவரது உலக அறிவு அபரிதமானது... வியப்புக்குரியது," என்றார்.

யுவன்
‘புறம்போக்கு' படத்தை எஸ்.பி.ஜனநாதன், யுடிவி மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











