பராசக்தி ஹீரோயின் அந்த பிரபல நடிகருடன் டேட்டிங்கா?.. அம்மாவே அப்படி சொல்லிட்டாங்களே.. இது எப்போ?
மும்பை: சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை ஸ்ரீலிலா பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யானுடன் டேட்டிங் சென்று வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. ரூமர் பாய் பிரண்ட் என பாலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ள நிலையில், சமீபத்தில் இது குறித்த கேள்விக்கு கார்த்திக் ஆர்யான் அம்மா அளித்த பதில் கிட்டத்தட்ட சீக்கிரமே ஸ்ரீலீலாவுக்கு திருமணம் ஆகிவிடும் என்றுதான் தோன்றுகிறது எனக் கூறுகின்றனர்.
2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சித்திரங்கதா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் நடிகை ஸ்ரீலீலா. தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகில் பல படங்களில் நடித்து வந்த அவர், பாலகிருஷ்ணா உடன் பகவந்த் கேசரி, மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் உள்ளிட்ட படங்களில் லீடு ரோலில் நடித்து டாப் ஹீரோயினாக மாறினார்.

பராசக்தி ஹீரோயின்: புஷ்பா 2 திரைப்படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிய ஸ்ரீலீலா தமிழ் சினிமாவுக்கு எப்போது வரப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். அந்த படத்திற்காக தற்போது இலங்கையில் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாக கூறுகின்றனர்.
பாலிவுட்டில் அறிமுகம்: தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் இளம் நடிகை ஸ்ரீலீலா எடுத்த எடுப்பிலேயே பாலிவுட்டுக்கும் பறந்து விட்டார். நடிகை சமந்தா இந்தியில் ஒரு படத்தில் நடிக்க பல வருடங்களாக போராடி வரும் நிலையில், கார்த்திக் ஆர்யான் நடிப்பில் உருவாகி வரும் ஆஷிக் 3 படத்தில் ஸ்ரீலீலா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நடிகருடன் டேட்டிங்: பாலிவுட் பட வாய்ப்பு மட்டுமின்றி மும்பையிலேயே ஒரேயடியாக செட்டில் ஆகும் அளவுக்கு நடிகர் கார்த்திக் ஆர்யானை ஸ்ரீலிலா காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. பாலிவுட் வட்டாரங்களும் இருவரும் ஒன்றாக டேட்டிங் சென்று வருவதாக தகவல்களை வெளியிட்டுள்ளன.
அம்மா கன்ஃபார்மே பண்ணிட்டாங்களா?: பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யானின் அம்மா சமீபத்தில் அளித்த பேட்டியில், கார்த்திக் ஆர்யான் திருமணம் குறித்து பேசும் போது டாக்டர் பொண்ணு தான் தனக்கு மருமகளாக வேண்டும் என்று கூறியுள்ளார். நடிகை ஸ்ரீலீலா கடந்த 2021 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தது குறிப்பிடத்தக்கது. டாக்டர் மருமகள் என்று கார்த்திக் ஆர்யானின் அம்மா சொல்லியிருக்கும் நிலையில், இருவரும் காதலித்து வருவதை அவர் கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கார்த்திக் ஆர்யான் சொத்து மதிப்பு: புல் புலாயா 2 மற்றும் 3 என பல ஹிட் படங்களில் நடித்துள்ள கார்த்திக் ஆர்யான் அடுத்ததாக ஆஷிக் 3 படத்தில் ஸ்ரீலீலாவுடன் இணைந்து நடித்து வருகிறார். 34 வயதாகும் பாலிவுட் நடிகரான இவருக்கு 46 முதல் 50 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருக்கும் என்கின்றனர். பாலிவுட் பட வாய்ப்பு மட்டுமின்றி மிகப்பெரிய சம்மந்தமே மும்பையில் ஸ்ரீலீலாவுக்கு கிடைக்கப் போகிறதா என சினிமா வட்டாரமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது. பட புரமோஷனுக்காக இப்படி கிளப்பி விடுகின்றனரா என்கிற கேள்விகளும் எழாமல் இல்லை.


Click it and Unblock the Notifications











