எனக்கு கணவரை தந்தது சினிமா.. அதை குறை சொல்பவர்களுக்கு வேறு நோக்கம் இருக்கிறது.. பிரபல நடிகை படார்!

By

மும்பை: சினிமாவை குறை சொல்பவர்கள், தங்கள் சொந்த ஆதாயத்துக்காகவே பேசுகிறார்கள் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில், ஷாம் நடித்த அகம்புறம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தவர், இந்தி நடிகை காஷ்மிரா ஷா.

இந்தியில், எஸ் பாஸ், பியார் து ஹோனா ஹி தா, சாஸிஸ், ஜங்கிள், சிட்டி ஆஃப் கோல்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

குழந்தைகளின் அம்மா

குழந்தைகளின் அம்மா

சின்னத்திரை தொடர்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வரும் காஷ்மிரா, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமானார். ஹாட் புகைப்படங்களாலும் கிளாமர் காட்சிகளாலும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் இவர். இப்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்டாலும் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

திறமையை நம்பினர்

திறமையை நம்பினர்

இவர் கடந்த சில மாதங்களுக்கு பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் சம்பவத்தை தானும் எதிர்கொண்டதாகத் தெரிவித்திருந்தார். சினிமா துறையில் இது ஓர் அங்கமாகவே இருக்கிறது. நானும் கூட அப்படி ஓர் அனுபவத்தை எதிர்கொண்டேன். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என் திறமையை நம்பினார்கள் என்று கூறியிருந்தார்.

பரபரப்பு பாலிவுட்

பரபரப்பு பாலிவுட்

நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு இந்தி சினிமாவில் நெபோடிசம் பற்றிய பேச்சு எழுந்தது. திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், வாரிசு நடிகர், நடிகைகளுக்கே வாய்ப்பு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது. இதுபற்றிய பரபரப்பு பாலிவுட்டில் நிலவியது. நடிகை கங்கனா உள்பட பலர் பாலிவுட் பிரபலங்களை சாடினர்.

சொந்த காரணங்கள்

சொந்த காரணங்கள்

இந்நிலையில், இதுபற்றி நடிகை காஷ்மிரா ஷா கூறும்போது, சினிமாவை குறை சொல்பவர்கள் தங்கள் சொந்த காரணங்களுக்காகவே பேசுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, சினிமாவை என்னால் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அதுதான் எனக்குப் பெயரையும் என் கணவரையும் (கிருஷ்ணா அபிஷேக்) தந்தது.

நானும் அவுட்சைடர்

நானும் அவுட்சைடர்

அதனால் என்னால் சினிமாவை மோசமாக சிந்திக்கக் கூட முடியாது. நானும் அவுட்சைடர்தான். என்னை சினிமா சிறப்பாகவே ஏற்றுக்கொண்டது. இது என் சினிமா துறை. நான் இப்போது இப்படி இருப்பதற்கு காரணமே இதுதான். சமூக வலைதளங்களின் கிண்டல், கேலி பற்றி கேட்கிறார்கள். நான் அதைக் கண்டுகொள்வதில்லை. நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இப்போதும் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. இவ்வாறு காஷ்மிரா ஷா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X