இளையராஜா இசைக்கு Dolphin நடனமாடியதா?.. என்னங்க இது?.. கஸ்தூரியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சென்னை: இளையராஜா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். பல வருடங்களாக தமிழ் சினிமா இசையில் தனக்கென தனி முத்திரையை தொடர்ந்து பதித்துவருபவர் அவர். இந்தக் கால இசையமைப்பாளர்களுடன் போட்டிப்போட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் இளையராஜா குறித்து நடிகை கஸ்தூரி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா தமிழ் சினிமாவின் இசையின் போக்கை மாற்றி வைத்தவர். அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது பயணம் 50 வருடங்களை தொடவிருக்கிறது. இத்தனை வருடங்களில் அவர் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இத்தனை படங்கள் அவர் பணியாற்றியிருந்தாலும் ஒரு படத்தின் இசை போல் இன்னொரு படத்தின் இசை இதுவரை இருந்ததில்லை என்பதிலேயே அவருடைய தனி சிறப்பை நாம் புரிந்துகொள்ளலாம்.

விடுதலை 2: தற்போதைய நவீன உலகத்தில் ரசிகர்களின் இசை ரசனை மாறிவிட்டாலும் அவர்கள் இளையராஜாவை விட்டு நகர்வதில்லை. எத்தனை இசையமைப்பாளர்கள் இப்போது இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் மணிமகுடமாக இருப்பது ராஜா மட்டும்தான். தற்கால தலைமுறையினர்கூட இளையராஜாவை வெகுவாக ரசித்து கொண்டாடிவருகின்றனர். வெற்றிமாறனும் அதற்காகத்தான் இளையராஜாவிடம் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் சென்றார்.

Kasthuri has said that dolphins danced to Ilayaraaja s music
Photo Credit:

நல்ல வரவேற்புதான்: இளையராஜா விடுதலை படத்தின் 2 பாகங்களுக்கும் கொடுத்திருந்த பாடல்களும் பின்னணி இசையும் தரமாகத்தான் அமைந்திருந்தன. மேலும் ஜமா உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்திருந்தார் அவர். பெரிய இயக்குநர், சின்ன இயக்குநர் என்றெல்லாம் பார்க்காமல் கதை நன்றாக இருக்கிறதா? தனது இசைக்கு அந்தக் கதையில் வேல்யூ இருக்கிறதா என்பதை கடந்த பல வருடங்களாகவே தொடர்ச்சியாக கவனித்துவருவதும் பாராட்டுக்குரியது.

ராஜா மீது தொடர் விமர்சனம்: இளையராஜாவை பலரும் புகழ்ந்தாலும் அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. ஆனால் அவர் அதற்கெல்லாம் செவி மடுக்காமல் தனது இசை பணியில் மும்முரம் காட்டிவருகிறார். தமிழ்நாடு முழுவதும் இசை கச்சேரி நடத்தவும் பிளான் செய்து; ஆரம்பித்தும்விட்டார். இந்த வயதிலும் இப்படி உழைக்கிறாரே என்று பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி பேசிய விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

கஸ்தூரி பேச்சு: அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், "அந்தியில வானம் என்ற பாடலை நாங்கள் ஒரு பீச்சில்தான் ஷூட் செய்தோம். அந்த ஷூட்டிங்கில் பாடலை ஒலிக்கவிடும்போது டால்பின்கள் எல்லாம் மேலே வந்து நடனம் ஆடும். பாடலை நிறுத்திவிட்டால் அது உள்ளே போய்விடும்.மீண்டும் பாடலை போட்டால் மேலே வந்து ட்யூனுக்கு தகுந்தபடி நடனம் ஆடும்" என்றார். இதனைப் பார்த்த நெட்டிசன்களோ, ஏன் மேடம் இளையராஜா இசைக்கு டால்பின் நடனம் ஆடியதா? இதெல்லாம் ரொம்ப் ஓவரா இல்லையா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X