என்ன இந்த குத்து குத்தறாங்க கஸ்தூரி... சினிமாவுல திரும்பவும் ஒரு வலம் வரலாம் போலருக்கே!

சென்னை : நடிகை கஸ்தூரி சங்கர், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர்.

தற்போது சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ள டான்ஸ் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி, ஆத்தா உன் கோயிலிலே படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். தொடர்ந்து அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய மொழிப்படங்களில் மட்டுமின்றி இந்தியிலும் நடித்துள்ளார்.

சமூக பிரச்சினைகளில் குரல்

சமூக பிரச்சினைகளில் குரல்

இடையில் சில காலங்கள் நடிக்காமல் இருந்த இவர் கடந்த 2009ல் வெளியான அருண் விஜய்யின் மலை மலை படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து நடித்து வரும் இவர், சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

இதன்மூலம் இவர் பிரபலமாக காணப்படுகிறார். பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான இவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நடன வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நடன வீடியோ வெளியீடு

நடன வீடியோ வெளியீடு

இடுப்பை வளைத்து இவர் ஆடியுள்ள இந்த நடனம் சிறப்பாக அமைந்துள்ளது. இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் லவ் மற்றும் கைதட்டல் எமோஜிகளை பகிர்ந்து வருகின்றனர். ஏராளமானோர் லைக்ஸ்களையும் அளித்துள்ளனர்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

கஸ்தூரி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கு ஏற்றாற் போல இந்த நடனத்தில் அவர் சிறப்பாக ஆடியுள்ளார்.

Recommended Video

கல்லூரி மாணவிகளுடன் டேன்ஸ் ஆடிய கஸ்தூரி | Tamil Filmibeat
புற்றுநோயாளிகளுக்கு உதவி

புற்றுநோயாளிகளுக்கு உதவி

90களில் வெளியான பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கஸ்தூரி. 2000ல் திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இதில் இவரது மகள் புற்றுநோயிலிருந்து மீண்டவர் என்றும் கூறப்படுகிறது. இதனால் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X