twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி

    By Siva
    |

    Recommended Video

    நான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ

    சென்னை: ராம்ப்வாக் செய்து கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த மாடலை புகழ்ந்த கஸ்தூரியுடன் நெட்டிசன்ஸ் மல்லுக்கு பாய்ந்துள்ளனர்.

    அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்த ஃபேஷன் ஷோவில் மாடல் மாரா மார்ட்டின் தனது 5 மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்தார். அதை பலரும் பாராட்டியுள்ளனர்.

    நடிகை கஸ்தூரியும் மாராவின் செயலை பாராட்டி ட்வீட்டினார்.

    கஸ்தூரி

    மாரா செய்தது போன்று இங்கு நடந்திருந்தால் பாராட்டியிருக்க மாட்டார்கள் மாறாக விமர்சித்திருப்பார்கள். தாயின் மார்பு கூட காமப்பொருள் என்று கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

    அமெரிக்கா

    300 ஆண்டுகளுக்கு முன்பு வரை மேலாடை இல்லாமல் வாழ்ந்தவர்கள் அவர்கள். அவர்களை பற்றிய விஷயத்தை எல்லாம் பெரிதாக பேசாதீர்கள் என்று ஒருவர் கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டார்.

    மேலாடை

    நெட்டிசனின் கமெண்ட்டை பார்த்த கஸ்தூரி எதை எப்படி புனிதமாக பார்க்கிறோம் என்பதை தான் தினமும் செய்தியில் பார்க்கிறோமே என்று நம் நாட்டில் நடக்கும் அவலத்தை மறைமுகமாக கூறினார்.

    ஐட்டம்

    இந்த வயதில் ஐட்டம் டான்ஸ் ஆடிக்கிட்டு ட்விட்டரில் கருத்து சொல்வதா என்று ஒருவர் கேட்டதற்கு கஸ்தூரியோ, "உன்னை சொல்லி குத்தமில்லை . டான்ஸ் ஆட வேண்டிய வயசுல உள்ளவர்களை அம்மா அண்ணி வேஷத்துல பார்த்து , படிக்க வேண்டிய வயசுல உள்ள சிறுமிகளை i டான்ஸ் ஆட விட்டு பார்த்து வக்கிரம் ஊறி போன சமுதாயம் ஆயிட்டோம் ." என்றார்.

    பப்ளிசிட்டி

    நடந்து கொண்டே பால் கொடுப்பது எல்லாம் விளம்பரம் என ஒருவர் கமெண்ட் போட்டார். அதை பார்த்த கஸ்தூரி, 'நான் கார் ஓட்டிகிட்டே , சமைச்சுக்கிட்டே, பஸ்ஸுல, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே எல்லா சந்தர்ப்பத்துலயும் பால் குடுத்துருக்கேன். மேடையில ஒரு வினாடிவினா போட்டியில பங்கெடுத்துகிட்டே பால் கொடுத்திருக்கேன். கனடாவுல ஒரு MP பால் கொடுத்துக்கிட்டே நாடாளுமன்ற வோட்டெடுப்புல கலந்துக்கிட்டாங்க.' என்றார்.

    திரும்பி போயிடுங்க

    கஸ்தூரி, நீங்க அமெரிக்காவுக்கே திரும்பி போயிடுங்க என்று ஒருவர் கூறியுள்ளார்.

    English summary
    Netizens had an argument with actress Kasturi who tweeted about the American model doing rampwalk while brestfeeding her 5 month old daughter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X